30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் திரில்லர் படம் ” ஜெர்க் “
2K புரொடக்ஷன்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரித்துள்ள படத்திற்கு ” ஜெர்க் ” என்று வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்கள்.
மலைப் பிரதேசங்களில் இயற்கை வளத்தையும், நம் மண்ணையும், பல தலைமுறைகளாக தங்களது உழைப்பால் பாதுகாத்து வரும் மக்கள் முதலாளித் துவத்தால் இன்று வரை அடிமைபட்டுத் தான் கிடக்கிறார்கள். அவர்களது முன்னேற்றம் இன்றுவரை கேள்விக் குறியாக தான் இருக்கிறது.
அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைத் தொடர்பே இல்லாத தமிழகத்தின் ஒரு முக்கியமான மலைபிரதேசத்தில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாக்கி இருக்கிறோம்.
படப்பிடிப்பு முழுவதையும் ஊட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள அடர்ந்த மலைப்பகுதியில் நடத்தியிருக்கிறோம்.
இசையாமைப்பாளர் தரண்குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருப்பது கூடுதல் பலம்.
” உன்னை போல யாருமில்ல ” என்ற பாடலை வைக்கம் விஜயலட்சுமியும்,” மஜா மஜா ” என்ற பாடலை செந்தில் ராஜலட்சுமியும் பாடியிருக்கிறார்கள்.
இந்த மூன்று பாடல்களுக்கும் தரண் குமார் சிறப்பாக இசையமைத்துள்ளார் நிச்சயம் இந்த மூன்று பாடல்களும் இந்த வருடத்தின் வெற்றி பாடல் மட்டுமல்லாமல் இணையதலங்களை அலங்கரிக்கும் பாடல்களாகும் என்பது எங்களது நம்பிக்கை.
இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது விரைவில் திரையரங்குகளில் வெளியிட இருக்கிறோம் என்கிறார்கள்.
ஒளிப்பதிவு – ஆலன் பரத் பிரபல இசையமைப்பாளர் தரண் குமார் இசையமைத்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற ஜாலியோ ஜூம்கானா பாடல் மூலம் பட்டிதொட்டியிங்கும் பிரபலமான பாடலாசிரியர் கு. கார்த்திக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் ஏழுதியிருக்கிறார்.