‘சாட் பூட் திரீ – விமர்சனம்

ஒரு நிலையில் பெற்றோர் ஊரில் இல்லாத நிலையில் அந்த நாய் தொலைந்து விட, நாயைத் தேடி எல்லோரும் ஊரெங்கும் அலைகிறார்கள். அவர்கள் சந்திக்கும் திருடர்கள் , ரவுடிகள், எளிய நல்ல மனிதர்கள், மயக்க மருந்து கொடுத்து நாய்களை உயிரோடு புதைக்கும் அரசு அலுவலர்கள் அவர்கள் சிறுவர்களுக்கு தந்த அனுபவங்கள்.. நாய் என்ன ஆனது சிறுவர்கள் என்ன ஆனார்கள் என்பதே படம்.
யூகிக்க முடிந்த திரைக்கதையும் காட்சிகளும்.
சிறுவர்கள், பெரியவர்கள் எல்லோரும் நன்றாக நடித்துள்ளனர் . யோகி பாபு, சாய் தீனா, காதல் சுகுமார் ஆகியோர் இருக்கிறார்கள்.

அதே நேரம் பணக்கார வீட்டுப் பிள்ளைகளை விட ஏழை பிள்ளைகள் வாழ்வியல் அனுபவம் காரணமாக எதிர்பாராத அனுபவங்களை இயல்பாக சமாளிப்பதைச் சொன்ன விதம் பாராட்டுக்குரியது .
ஏழை வீட்டுப் பிள்ளைகளின் சினிமா மோகத்தை மறைமுகமாக சாடும்படி பூவையார் கதாபாத்திரதத்தைப் படைத்துள்ளதும் கவனிக்கத்தக்கது
வீணை மேலோங்கும் ராஜேஷ் வைத்யாவின் இசை , வண்ணமயமும் குளுமையும் நிறைந்த சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஆறுசாமியின் கலை இயக்கம் ஆகியவை மிக சிறப்பு
இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருக்கலாம் என்றாலும் குழந்தைகள் படம் என்பது பெரிய பிளஸ் .