‘ரோமியோ’ – விமர்சனம்
அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, விடிவி கணேஷ், தலைவாசல் விஜய், இளவரசு, ஸ்ரீஜா ரவி என பலரும் நடித்துள்ள படம் “ரோமியோ”. பரத் தனசேகர் இசையமைத்துள்ள இப்படத்தில் ஃபரூக் ஜெ பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனி சொந்தமாக தயாரித்திருந்தார்.
மனைவியின் எண்ணத்தை புரிந்து கொள்ளும் விஜய் ஆண்டனி, தன்னை மிருளாளினிக்கு பிடித்த மாதிரி மாற்ற என்னவெல்லாம் செய்கிறார் என்பதை ரொமான்டிக் காமெடி கலந்து ரோமியோ-வாக எடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் விநாயகர் வைத்தியநாதன்.
மிருளாளினி ரவியும் இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் அவரின் நடிப்பு ரசிக்க வைக்கிறது. இவர்களை தவிர யோகிபாபு, விடிவி கணேஷ், ஷாரா ஆகியோரின் கேரக்டர்கள் சிறப்பாக அமைந்திருக்கிறது.
மைனஸ் என பார்க்கும்போது ரோமியோ என பெயர் வைத்து விட்டு ஃபீல் பண்ணும் அளவுக்கு காதல் காட்சிகள் இல்லாதது குறையாக உள்ளது. அதேபோல் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைத்து விடுகிறது. அதனை கொஞ்சம் குறைத்திருக்கலாம். மேலும் படத்தின் திரைக்கதை வித்தியாசமாக தெரிய வேண்டும் என்பதற்காக பல காட்சிகளை சேர்த்திருப்பது கொஞ்சம் ஒட்டாமல் சொதப்பலாகவே அமைந்துள்ளது. ட்ரெய்லர் பார்த்து விட்டு செல்பவர்களுக்கு நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் எந்தவித முகம் சுழிக்க வைக்கும் காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் இந்த விடுமுறை தினத்தில் ரோமியோ படத்தை தாராளமாக காணலாம்.