இசையமைப்பாளர் டி.இமான் இசையில் இணையத்தைக் கலக்கும் “மயோன்” பாடல் !!
இசையமைப்பாளர் டி.இமான் இசையில் உருவான புதிய பாடலான “மயோன்” பாடல், இசை ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
தமிழ் இசை உலகில், ரசிகர்களின் பாடல் பிளே லிஸ்டில் நீங்காத இடம் பிடித்துள்ளது டி.இமான் பாடல்கள். அந்த வரிசையில் தற்போது, கோபுரம் பிலிம்ஸ் G.N.அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பில், நட்சத்திர நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘இங்க நான்தான் கிங்கு‘ என்ற படத்தின் ‘மாயோனே செல்ல மாயோனே‘ என்ற பாடல், சார்ட்பஸ்டர் ஹிட்டாக மாறியுள்ளது. இணையம் முழுக்க REELS-களாக இப்பாடல் மிகப்பெரிய வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்குப் பின் அனைத்து தரப்பு பெண்களையும் மிகவும் கவர்ந்துள்ளது இப்பாடல்.
மாயோனே பாடல் நகரம் முதல் கிராமம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் முணுமுணுக்கும் பாடலாக மாறியுள்ளது.
பட வெளியீட்டுக்கு முன்னதாக பாடலுக்குக் கிடைத்து வரும் மிகப்பெரிய வரவேற்பால், இசையமைப்பாளர் டி.இமான் அவர்களும் தயாரிப்பாளர் திரு G.N. அன்புச்செழியன் அவர்களும் மற்றும் படத்தின் நாயகன் சந்தானம் அவர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.