• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மாரீசன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
July 25, 2025
in விமர்சனம்
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மாரீசன் – விமர்சனம் 

மாமன்னன் படத்தைத் தொடர்ந்து வடிவேலு ஃபகத் ஃபாசில் இணைந்து நடித்துள்ள படம் மாரீசன் . சுதீஷ் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ள நிலையில்   சூப்பர் குட் ஃபிலிம்ஸ் படத்தை தயாரித்துள்ளது. கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

திருட்டு கேஸில் ஜெயிலில் இருந்துவிட்டு விடுதலையாகிறான் தயாளன் (ஃபகத் ஃபாசில்). ஒரு சின்சியரான திருடன் என ஃபகத் ஃபாசிலின் கதாபாத்திரத்தை சொல்லலாம். ஒரு விட்டில் திருடச் செல்லும் போது அங்கு இருக்கும் வேலாயுதம்(வடிவேலுவை) பார்க்கிறான். தனக்கு அல்ஸைமர்ஸ் என்கிற ஞாபக மறதி இருப்பதாகவும்  தன்னை தன் மகன் கட்டிப்போட்டு வைத்திருப்பதாகவும் வடிவேலு கூறுகிறார். தன்னை காப்பாற்றினால் 25 ஆயிரம் பணம் தருவதாக சொல்கிறார். ஆனால் வேலாயுதத்திடம்  25 லட்சம் இருப்பதை தெரிந்துகொள்ளும் தயா அந்த மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க திட்டமிடுகிறான். பைக்கிலேயே அவரை நாகர்கோயிலில் இருந்து திருவண்ணாமலைக்கு கொண்டு செல்வதாக கூறி இருவரும் பயணிக்கின்றனர். உண்மையில் வடிவேலுவுக்கு அல்ஸைமர்ஸ் இருக்கிறதா. அவர் திருவண்ணாமலைக்கு ஏன் செல்கிறார்? அவரிடம் இருந்து பணத்தை தயாளன் கொள்ளையடித்தானா என்பதே மாரீசன் படத்தின் கதை
மாமன்னன் படத்திற்கு பின் வடிவேலு மற்றும் ஃபகத் ஃபாசிலை ஒரு நல்ல ரோட் மூவியில் பார்ப்பது சுவாரஸ்யமான ஒரு அனுபவம்தான். முந்தைய படத்தில் இருவரும் நேரெதிர் கதாபாத்திரங்களில் நடித்தார்கள். ஆனால் இந்த முறை இருவரும் நெருங்கி பழகு இரு ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நடிப்பில் அவர்களுக்கு இடையில் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி இருப்பதை முதல் பாதியில் பார்க்க முடிகிறது. நகைச்சுவை காட்சிகளை திணிக்காமல் இருவருக்கும் இடையில் மிக இயல்பாக நகைச்சுவை துணுக்குகள் எழுதப்பட்டிருந்த விதம் சிறப்பு.

ஆனால் மாரீசன் முழுக்க முழுக்க ஒரு ஃபீல் குட் படம் கிடையாது. இரண்டாம் பாதியில் இருந்து படம் கிரைம் த்ரில்லர் ஜானருக்கு மாறுகிறது. சுவாரஸ்யமான ஒரு திருப்பம் என்றாலும் இந்த இருவரை கடந்து மற்ற பிரச்சனையோ கதாபாத்திரங்களோ கதையில் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை. போலீஸ் கதாபாத்திரத்திற்கு கோவை சரளா ஒரு தனித்துவமான சாய்ஸ் தான் என்றாலும் அவருக்கு கதையில் பெரிய பங்கு இருக்கவில்லை. இரண்டாம் பாதியில் குழந்தை வன்கொடுமையைப் பற்றி படம் பேசுகிறது. ஃபிளாஷ்பேக்கில் வரும் இந்த காட்சிகள் மிக தட்டையாக கையாளப்பட்டிருந்தன. படத்தில் உள்ள சின்ன சின்ன ட்விஸ்ட்கள் அந்த கதாபாத்திர வரம்பை மீறாமல் மிக சாமர்த்தியமாக கையாளப்பட்டிருப்பது திரைக்கதை எழுத்தில் பிளஸ்.  பாடல்களைக் காட்டிலும்  யுவனின் பின்னணி இசை கவனமீர்க்கின்றன. கலையரசனின் ஒளிப்பதிவு நிலங்களை எதார்த்தமாக காட்சிபடுத்தியிருந்த விதம் சிறப்பு. ஆனால் குறைகளை கடந்து  ஃபகத் ஃபாசில் வடிவேலு காம்போ நம்மை ஏதாவது செய்து ஒரு சிரிப்பை தூண்டுகிறது.

ஆனால் இந்த மாரீசன் படம் மலையாள வாடையுடன் வந்த படம்.

மொத்தத்தில் ஓ டி டி க்கு ஓகேவான படம்.
Previous Post

ரசிகர்களைக் கவரும் நியூ ஏஜ் ரொமாண்டிக் த்ரில்லர் திரைப்படம் ‘அந்த ஏழு நாட்கள்’!

Next Post

ஹரிஹர வீரமல்லு- விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

ஹரிஹர வீரமல்லு- விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.