‘ஜவான்’ பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார். ஜவானின் புதிய போஸ்டரில் ‘மரணத்தின் வியாபாரி’ என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி… எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்..!
ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘ஜவான்’ மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, ‘மரணத்தின் வியாபாரி’ என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். ‘ஜவான்’ பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது.

ஒவ்வொரு போஸ்டர் வெளியிட்டிலும் ‘ஜவான்’ படத்தை பற்றிய எதிர்பார்ப்பும், உற்சாகமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஷாருக்கானின் வழுக்கை தோற்றம் முதல் நயன்தாராவின் தீவிரமான தோற்றம் வரை… ஒவ்வொரு போஸ்டரும் இந்த அதிரடி களியாட்டத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. விஜய் சேதுபதியின் மிரட்டலான கதாபாத்திரத்தின் வெளிக்கொணர்வு… படத்தின் மீதான கவர்ச்சியை அதிகப்படுத்தி.. எதிர்பார்ப்பின் மற்றொரு அடுக்கை சேர்த்துள்ளது.