‘குஷி’ – விமர்சனம்
ஒரு மிகப்பெரிய தோல்வி படத்திற்குப் பிறகு விஜய் தேவரகொண்டா நடித்திருக்கும் நல்ல படம் என்று கூட சொல்லலாம்.
காஷ்மீரில் அரசு வேலை வாய்ப்பு கிடைத்த விப்லவ்(விஜய தேவர்கொண்டா) ஆராத்யாவை (சமந்தா) சந்திக்கிறார். முதல் சந்திப்பிலே காதலில் விழும் கதாநாயகன், தன் காதலுக்காக எதை எதையோ செய்கிறார். பின்னர், கதாநாயகியும் அவர் காதலை ஏற்கிறார். விப்லவ்- ஆராத்யாவின் பெற்றோருடைய நம்பிக்கை எதிர் எதிர் துருவங்களாக இருப்பது திருமணத்திற்கு முட்டுக்கட்டையாக நிற்கிறது.
![Vijay Deverakonda, Samantha Kushi Movie Trailer Photos - Sakshi](https://m.sakshi.com/sites/default/files/styles/gallerywatermark/public/gallery_images/2023/08/9/Vijay%20Devarakonda%20Samantha%20Kushi%20movie%20HD%20Stills-2.jpg?itok=Vh8lqwbC)
தெலுங்கு இயக்குநர் ஷிவா நிர்வானா, தனது நான்காவது படமான குஷியின் கதையை நன்றாகவே கடத்தி சென்று இருக்கிறார் என்று சொல்லலாம். நிறைய காதல், கதைக்கேற்ற இண்டிமேட் காட்சிகள், கொஞ்சம் காமெடி, ஆங்காங்கு சென்டிமென்ட், தேவைக்கேற்ற இடங்களில் ஆக்ஷன் என அனைத்தும் பார்க்க கோர்வையாக உள்ளது.
![Vijay Deverakonda, Samantha Kushi Movie Trailer Photos - Sakshi](https://m.sakshi.com/sites/default/files/styles/gallerywatermark/public/gallery_images/2023/08/9/Vijay%20Devarakonda%20Samantha%20Kushi%20movie%20HD%20Stills-1.jpg?itok=1TGQ_aIA)
விஜய் தேவரகொண்டாவின் அப்பாவாக நடித்த சச்சின் கெட்டேகர், மாற்றான் உள்ளிட்ட தமிழ் படங்களின் நடித்திருக்கிறார். நாத்திகவாதியாகவும் பிள்ளையை பெற்ற தந்தையாகவும் இவர் நடிப்பில் குறை ஏதும் இல்லை. கதாநாயகனின் அம்மாவாக நடித்த சரண்யா பொன்வண்ணன் பற்றி சொல்லவே தேவையில்லை, அவரது நடிப்பு எப்போதும் டாப்புதான். கதாநாயகியின் அப்பாவான முரளி ஷர்மாவின் நடிப்பும் சூப்பர். அத்துடன் இப்படத்தில் லக்ஷ்மி, ரோஹினி, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் அவர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர்.
![Kushi(2023) Photos Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Kushi(2023) Photos Movie - FilmiBeat](https://www.filmibeat.com/ph-big/2023/08/kushi-2023_1691581748110.jpg)
படத்தின் முதல் பாதி, ஒரு எண்ட் கார்ட் இல்லாமல் நீண்டு கொண்டே போனதால் அங்கு சற்று தொய்வு ஏற்பட்டது. படத்தின் நீளம் ஒரு மைனஸ். காஷ்மீரில் தொடங்கி ஹைதராபாத், கேரளா, துருக்கி என பல இடங்களின் அழகை காட்டுகிறது குஷி. அர்ஜுன் ரெட்டி பிஜிஎம், ஊ சொல்றியா மாமா ரெஃபரன்ஸ் வந்த போது விசில் சத்தம் குவிந்தது. ஆக மொத்தம் சித்தாந்தத்திற்கும் சாஸ்திரத்திற்கும் வரும் சண்டையை விட, மனித உணர்வுகளே பெரியது என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட குஷி படத்தை, உங்கள் லவ்வருடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று கொஞ்சம் ஃபீல் செய்துவிட்டு வரலாம்.
இருவருக்கும் உண்டான காதல் காட்சிகளில் சமந்தாவின் முதுமை அங்கங்கே தெரிந்தாலும் ஒட்டுமொத்தமாக படமாக பார்க்கும் பொழுது ஓகே தான்.