சித்தா – விமர்சனம்
எடாகி என்டர்டைன்மெண்ட் தயாரித்து, சித்தார்த், நிமிஷா விஜயன், அஞ்சலி நாயர் நடித்து வெளி வந்துள்ள படம் சித்தா. SU. அருண்குமார் இப்படத்தை இயக்கியுள்ளார்.
படத்தில் சில லாஜிக் மீறல்கள், சில தவறுகள் இருந்தாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு சித்தார்த் ஒரு சரியான படத்தில் நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம்.படத்தின் நாயகனாக இல்லாமல் கதையின் நாயகனாக வந்துள்ளார் சித்தார்த்.தான் தவறாக பழியை சுமக்கும் போது தவிப்பதும், அண்ணன் மகள் பாதிக்கப்படும் போது ஒரு அன்பான சித்தப்பாவாகவும் நல்ல நடிப்பை தந்துள்ளார்.நிமிஷா விஜயனும், அஞ்சலி நாயரும் நம் வீட்டு பெண்களையும், அம்மாகளையும் நினைவில் கொண்டு வருகிறார்கள்.
படத்தில் சில காட்சிகள் யதார்த்தத்தை மீறியதாக இருந்தாலும், திரைக்கதை நகர்வு ஒரு திரில்லர் படத்தை பார்த்த உணர்வை தருகிறது.படத்தின் கதைக்களமான பழனி, உடுமலையை மாறுபட்ட கோணத்தில் பாலாஜி சுப்பிரமணி ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேஷ் A.பிரசாத்தின் படத்தொகுப்பு படத்தை ஒரு த்ரில்லர் படமாக மாற்ற உதவியுள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கும் போதெல்லாம் நாம் என்ன எதிர்வினை செய்கிறோம் என்ற கேள்வியை முன் வைக்கிறது சித்தா திரைப்படம்.
இந்த படம் பார்த்தால் ஒரு பெற்றோராக கூடுதல் பொறுப்பு இருப்பதை உணர முடியும்.
2018 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலம் சிமோகாவில் நடந்த உண்மை சம்பவம் தான் இந்த படம் ஆனால் நாம் இயக்குனரை பார்த்து கேட்டதற்கு இல்லை என்று மறுத்ததோடு மட்டுமல்லாமல் அங்கங்க நடந்த சின்ன சின்ன விஷயங்களை வைத்து படமா எடுத்திருக்கேன் அப்படின்னு சொன்னாரு.