பதினெட்டு கரங்கள் கொண்ட ஐயப்பன் முதல்முறையாக திரையில் தோன்றுகிறார்!
இத்திரைப்படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகளில் மிக பிரமாண்டமான முறையில் ஐம்பது லட்சம் ரூபாய் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த காட்சியில் ஐயப்பன் விஸ்வரூப அவதாரமாக பதினெட்டு கரங்களில், பதினெட்டு ஆயுதங்களுடன் காட்சியளிக்கிறார்.

மேலும், இந்த திரைப்படத்தில் ஐயப்பன் மட்டும் இன்றி காவல் தெய்வம் கருப்பசாமியும் விஸ்வரூபமாக காட்சி தர உள்ளார். சிலையாக இருக்கும் கருப்பசாமி சாலைகளிலும், ஆற்றிலும் நடந்து வரும் பிரம்மிக்கத்தக்க கிராபிக்ஸ் காட்சிகளும் படத்தில் இடம் பெற்றுள்ளது. சுமார் 20 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளதால் திரைக்கு வர சற்று கால தாமதம் ஏற்பட்டது. மிக பிரமாண்டமாக தயாராகியுள்ள இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் திரையிடவும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடனம் சஞ்சிவ் கண்ணா, சண்டை பயிற்சி சரவெடி சரவணன், இசை பாபு அரவிந்த், படத்தொகுப்பு எஸ்.பி.அகமது, ஒளிப்பதிவு மகேஷ் மகாதேவன், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

செண்டை மேளம் முழங்க, ஐயப்பன் பூஜை நடத்தி, 18′ படியில் ஐயப்பனை அமர வைத்து, “ஸ்ரீ சபரி ஐயப்பன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது!
