சிவி-2 விமர்சனம்
சோசியல் மீடியாவினால் இன்றைக்கு இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள் அவரது அவர்களது வாழ்க்கை சீரழிக்கப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக விளக்கி இருக்கும் படம்தான் சிவி – 2.

2007ல் வெளியான “சிவி” படத்தின் தொடர்ச்சி என்பதால். “சிவி” படத்தில் பேய் செய்த கொலையையும் அந்த ஆஸ்பத்திரியிலுள்ள அமானுஷ்யத்தையும் சில காலேஜ் ஸ்டுடண்ட்ஸ், மக்களிடம் யூட்யூப் லைவ் செய்து பணம் ஈட்ட நினைக்கிறார்கள்.அப்போது இவர்களை இயக்கும் தேஜ் சரண்ராஜ் அவர்களுக்கே தெரியாமல் பணத்திற்க்காக மாயாஜால வேலைகள் செய்து வியூஸ்களை அள்ளிவிடுகிறார். அப்போது அவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி தான் சிவி முதல் பாகத்தில் வரும் கதாபாத்திரம் “நந்தினி”.தன் சாவுக்கு காரணமானவர்களை முதல் பாகத்திலே பழி வாங்கிய நந்தினி தற்போது வந்திருக்கும் மாணவர்களை என்ன செய்தார். அந்த மாணவர்கள் என்ன ஆனார்கள் என்பது தான் சுவாரஸ்யமான மீதிக்கதை…
ஒரு படத்தில் ஆங்காங்கே வரும் காமெடி காட்சிகளில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டி வந்த நடிகர் சாம்ஸ் இந்த சிவி- 2 படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல் என்றுதான் சொல்ல வேண்டும் .மனுஷன் அந்த அளவுக்கு படம் முழுவதும் தனது நடிப்பை நிரப்பி இருக்கிறார்
தேஜ் சரண்ராஜ் தனது பாத்திரத்தின் வலுவை அறிந்து இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். காட்சிக்கு தேவையான உடல் மொழியை கொண்டு நடித்தது கூடுதல் பலம்.இவருக்கு தமிழ் சினிமாவில் முன்னணி இடம் காத்திருக்கிறது.
கதைக்கு பக்கபலமாய் கல்லூரி மாணவர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அத்தனை நடிகர்களும். அவர்கள் திகிலடைவது மட்டுமல்லாமல் நம்மையும் சேர்த்து திகிலடைய வைக்கிறார்கள்.கிட்டதட்ட 15 ஆண்டுகள் கழித்து சீக்குவல் படம் இயக்க நினைத்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். கே.ஆர்.செந்தில் நாதனின் கதை தேர்வு சரியான ஒன்று.மேலும், தற்போதுள்ள தொழில் நுட்பத்தில் “கோ ப்ரோ” கேமராவை வைத்து மட்டும் இயக்கிவிட்டு. மீதி படத்தை 2007ல் வெளியான சிவி படத்தின் எஃபெக்ட்களை பயன்படுத்தியது சீக்குவல் படத்திற்கு தேவையான ஒன்று என்பதை இயக்குனர் அறிந்துள்ளார்.
பி.எல். சஞ்சயின் ஒளிப்பதிவு பல காட்சிகளில் நம்மை மிரட்டியது. அவரின் கேமரா கோணம் அனைத்தும் திகில் படம் என்ற அச்சத்தில் நம்மை வைத்திருக்கும்.மொத்தத்தில் சீக்குவல் படமாக வெளியாகும் பேய் படங்களின் மத்தியில் “சிவி-2” தனித்துவமான ஒரு இடத்தையே பெற்றுள்ளது. அனைத்து தரப்பினரும் குடும்பத்துடன் திரையரங்கில் பார்ப்பதற்கு சரியான தேர்வு இந்த “சிவி-2”.
சமூக வலைத்தளங்களில் தனக்கு பார்வையாளர்கள் அதிகம் வேண்டும் என்று கண்டதை எடுத்து யூடியூப் எனும் வலைதளங்களில் பதிவிட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கும் இளைஞர்களுக்கு இந்த சிவி 2 படம் அல்ல பாடம்.