மிஷ்கின் இசையில், ஆதித்யா இயக்கத்தில், விதார்த், பூர்ணா நடிப்பில் வெளிவந்துள்ள படம் டெவில். அலெக்ஸ் (விதார்த் ) மற்றும் ஹேமா ( பூர்ணா) தம்பதிகள். இந்த இருவரும் திருமணம் தாண்டிய ஒரு பந்ததிற்குள் இருக்கிறார்கள். இந்த உறவு பிரச்சனையால் ஒரு கொலை நடக்கிறது. இந்த கொலை ஏன்? யார் செய்தது என்ற உளவியல் திரில்லரில் கதையாக பயணம் செய்கிறது டெவில் படம்.
கார்த்திக் முத்து குமாரின் ஒளிப்பதிவும், S. இளையராஜாவின் படதொகுப்பும் இந்த பயமுறுத்தலுக்கு உத்ரவாதம் தருகிறது. மியூசிக் டைரக்டராக அவதாரம் எடுத்துள்ள இயக்குநர் மிஷ்கின் தான் மான சீக குருநாதர் இளையராஜாவை போலவே இசை அமைத்துள்ளார். சில இடங்களில் எந்த பின்னணி இசையையும் தராமல் உணர்வுகளை கடத்துகிறார். பல இடங்களில் தனது குருவை போலவே வயலின் இசையை மிகப் பிரமாதமாக பயன்படுத்தி உள்ளார்.
விதார்த் அவர் இதுவரை நடித்த படங்களில் இவ்வளவு வருகிறான காட்சிகளில் அவர் நடித்து பார்க்காத ரசிகர்களுக்கு இந்த படத்தில் விதாரத்தை பிடிக்கும்.