புதிய திரை அனுபவத்தை தரவிருக்கும் ‘ஒரு நொடி’ திரைப்படம்
பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார். தயாரிப்பு மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்.

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குனர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க இந்தக் கூட்டணி ‘ஒரு நொடி’ படத்தின் மூலம் திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.
‘ஒரு நொடி’ படத்தின் படப்பிடிப்புகள் முழுமையடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம். படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிடப்படும்.
மக்கள் தொடர்பு : ஸ்ரீவெங்கடேஷ்.