“வா வரலாம் வா” விமர்சனம்
எஸ்.ஜி.எஸ். கிரியேட்டிவ் மீடியா சார்பில் எஸ்.பி.ஆர் தயாரித்திருக்கும் படம் “வா வரலாம் வா”
தயாரிப்பாளர் எஸ்.பி.ருடன் இணைந்து இயக்கியுள்ளார் எல்.ஜி.ரவிசந்தர்
சூழ்நிலையால் சிறுவயதிலேயே சிறைக்கு சென்ற இரண்டு இளைஞர்கள் சிறையில் இருந்து திரும்பும்போது சொகுசாக ஆடம்பர வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு துணிகர செயல்களையும் சாதாரணமாக செய்ய தயாராகிறார்கள். விரைவில் பணக்காரர்களாக வேண்டும் ஆசையில் பேருந்து கடத்துகிறார்கள். பேருந்தில் 40 குழந்தைகளும் இரண்டு இளம் பெண்களும் இருக்க, அவர்களை வைத்து பணம் பறிக்க பெரும் திட்டம் வகுக்கின்றனர். இதனிடையே காதல், பாசம், பரிவு ஏற்பட்டு நண்பர்கள் இளம்பெண்கள் மீது காதல் வயப்படுகிறார்கள். இதற்கிடையில் பேருந்தில் இருந்த இரண்டு இளம் பெண்கள் குறி வைக்கும் வில்லனின் சதித்திட்டத்தையும், காவல்துறை இவர்களைத் தேடுவதையும் நண்பர்கள் அறிந்து என்ன முடிவு எடுக்கிறார்கள், வில்லனுக்கும் நண்பர்களுக்கும் இடையேயான தொடர்பு என்ன?அந்த இளம் பெண்கள் யார்?அந்த 40 குழந்தைகள் யார்? பேருந்து கடத்தும் ஐடியா எப்படி வந்தது? நண்பர்களின் பணம் சம்பாதிக்கும் ஆசை நிறைவேறியதா? கதாநாயகர்களுடன் கதாநாயகிகள் உடனான காதல் ஆசை நிறைவேறியதா? “வா வரலாம் வா”படத்தின் கதை.
‘பிக் பாஸ்’ புகழ் பாலாஜி முருகதாஸ் தான் படத்தின் நாயகன் பிக் பாஸில் பார்த்த பாலாஜிக்கும் படத்தில் பார்க்கும் பாலாஜிக்கும் நிறைய வித்தியாசங்கள் நடிப்பில் புதிய பரிமாணங்கள்.
இவரது குடும்பத்திற்கு நடக்கும் பின்னணி கதை நம் நெஞ்சை பதற வைக்கின்றது.
ஒரு கதாநாயகி இருந்தாலே படத்தில் ஓரளவுக்கு தூக்கி பிடித்து விடலாம் ஆனால் இதில் மாறாக இரண்டு நாய்கள் சொல்லவா வேண்டும்.
இரண்டு பேருமே கச்சிதமாக தனது கதாபாத்திரத்தை உயிர் கொடுத்து இருக்கிறார்கள்.
அந்த காட்டு பங்களாவுக்குள் நுழைந்த பிறகு படத்தில் கதையில் வேகம் இருக்கிறதோ இல்லையோ காமெடிக்கு பஞ்சமே இல்லை.
அவருக்கு உதவியாளராக வருபவர் யோகி பாபு வை நினைவுபடுத்துகிறார்.
பின்னணி இசை நீண்ட நாட்களுக்கு பிறகு தெளிவாக இருக்கின்றது என்று இசையமைப்பாளர் யார் என்று பார்த்தால் அட நம்ம ‘தேனிசை தென்றல்’ தேவா அதுதான் சூப்பரா இருக்கு அதிலும் அந்த கானா பாடல் அவரே பாடியிருப்பது தனி சிறப்பு.
கேமராமேன் தனது வேலையை சரியாக செய்திருக்கிறார் ஒரு சில இடங்களில் குறிப்பாக அந்த காட்டு பங்களாவில் இரவு காட்சிகளில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.
இருந்தாலும் இரட்டை இயக்குனர்களுக்கு வாழ்த்துக்கள்.