‘வடக்குப்பட்டி ராமசாமி’ – விமர்சனம்
இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கி சந்தானம் நடிப்பில் வெளிவந்த டிக்கிலோனா படத்திற்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்திருக்கும் படம் வடக்குப்பட்டி ராமசாமி.
ஒரு ஊரில் இருக்கும் சிறுவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை. தற்செயலாக நடந்த சம்பவத்தால் அவன் செய்த பானையை அந்த ஊரில் உள்ளவர்கள் கடவுளாக வழிபட ஆரம்பித்துவிட்டனர். இதனை தனக்கு வருமானம் பார்க்கும் ஒரு வியாபாரமாக மாற்றி வாழ்ந்து வருபவர் சந்தானம். இவருடன் இணைந்து ஊரை ஏமாற்றிவருபவர்களாக மாறனும், லொல்லு சபா சேஷூவும் நடித்துள்ளனர். இவர்களுக்கு அந்த ஊருக்கு வட்டாச்சியராக வரும் தமிழ் தொந்தரவு கொடுக்க, கோயில் பூட்டப்படுகின்றது. இதனால் ஏற்பட்டது என்னென்ன? இறுதியில் என்ன ஆச்சு? என்பது படத்தின் மிதிக் கதை. இதில் சந்தானம் தனக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து வெளியேற “மெட்ராஸ் ஐ” நோயை பயன்படுத்துவது, மக்களை அதிலிருந்து காக்க நினைக்கும் மருத்துவராக வருபவருக்கு ஒத்துழைக்காத ஊர் மக்களின் மனநிலை, படம் நடப்பதாக சொல்லப்படும் 1974ஆம் ஆண்டு காலகட்டத்தினை காட்டுகின்றது.
ஹீரோயினாக நடித்துள்ள மேஹா ஆகாஷ் அழகாக இருந்தாலும் அவருக்கு மிகவும் முக்கியமான கதாப்பாத்திரம் இல்லை. படத்தின் இசை காமெடி தன்மைக்கு ஏற்றமாதிரி சிறப்பாக அமைத்துள்ளார் ஷான் ரோல்டன். இரண்டாம் பாதியில் படம் கொஞ்சம் சலிப்பை ஏற்படுத்தினாலும், நிழல்கள் ரவியின் காட்சிகள் சலிப்பை போக்குகின்றன. இறுதியாக வரும் மொட்டை ராஜேந்திரன் ஸ்கோர் செய்கின்றார். கூல் சுரேஷ் கதாப்பாத்திரம் நகைச்சுவையில் கவனம் ஈர்க்கின்றது.
தமிழ் சினிமாவில் காமெடி டிராக்கை மையப்படுத்திய கதைகளிலும் சரி, ஜனரஞ்சகமான படங்களிலும் சரி ஆங்காங்கே வரும் இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கின்றது. இந்தப் படத்திலும் இரட்டை அர்த்த வசனக் காட்சிகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
முதல் பாதையில் சந்தானத்தின் ஆதிக்கம் இருந்தாலும் நிழல்கள் ரவியை வைத்து இவர்கள் அமைத்திருக்கும் காமெடி காட்சிகள் கலகல லொள்ளு சபா மாறன் சேசு இவர்களின் கூட்டணி படம் பார்ப்பவரை சிரிக்க வைக்கும்.