இப்படத்தில் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி எனப் பலர் நடிச்சிருக்காய்ங்க.
கோவணத்தோட டைரக்ட் செஞ்ச டைரக்டர் தயாவல் கமிட் ஆன எல்லோரின் உழைப்பும் பெரிதாகப் பேசப்படும் அப்படீங்கறாய்ங்க.
குறிப்பா இந்த ‘தங்கலான்’ கேரக்ட்ரோடு பல மாசங்கள் ட்ராவல் செஞ்ச கோலிவுட்டின் தாத்தாக்காளில் ஒருவரான சீயான் விக்ரம், இந்த படத்தை முடிச்சுக் கொடுத்து புட்டே, அந்தக் கதாபாத்திரத்திலிருந்து வெளியே வந்தாருன்னு செய்தியை பரவ விட்டாய்ங்க

அப்படத்தின் சிக்கல்களை முன்பே உணர்ந்த விக்ரம், அதன் புரொமோஷனில் பங்கேற்பதையும் தவிர்த்து ஃபாரினுக்கு எஸ்கேப் ஆகிட்ட்டார்.
‘ஸ்கெட்ச்’, ‘சாமி 2’, ‘கடாரம் கொண்டான்’ ‘கோப்ரா’ போன்ற கமெர்ஷியல் ஆக்ஷன்கள் கை கொடுக்காத நிலையில் ‘தங்கலான்’ படத்தைப் பெரிதும் எதிர்பார்க்கிறார். படம் வெளியான பின்னர் ‘தங்கலான்’ உழைப்பு பேசப்படும், ஆச்சரியப்படுத்தும் என்பதால், அந்தப் பெயரைத் தக்க வைக்கும் விதத்தில் அடுத்தடுத்து கதைகள் தேர்ந்தெடுக்க விரும்பினார்..
ஆனா இந்த ‘தங்கலான்’ படத்துக்கு ரீ-ஷூட் இருப்பதால், ரிலீஸ் தள்ளிப்போகிறது என்ற தகவல் பரவியிருக்கிறது.
இதுகுறிச்சு வட்டாரத்தில் விசாரிச்சா, “அய்யே.. அப்படி ஏதுமில்லைங்கண்ணா. ரீ-ஷூட், பேட்ச் ஒர்க் வேலைகள் எல்லாம் பக்காவா முடிஞ்சுடுச்சிச்சு . படம் வரும் ஜனவரி 26ம் தேதி வெளியாவது கன்ஃபார்ம் என்பதால் அதன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் டாப் கியரில் போய்க் கொண்டிருக்குண்ணா. குறிப்பாக வி.எஃப்.எக்ஸ். பணிகள் சிறப்பாக நடைபெற்று வருது. படம் வெளியானதும், ‘வி.எஃப்.எக்ஸு’க்கென தனிப்பெயர் கிடைக்கும்” அப்படீங்குது ‘தங்கலான்’ வட்டாரம்.