‘அஞ்சாமை’ – விமர்சனம்
அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் நமது தமிழ்நாட்டு மாணவர்கள் பலர் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று சாதனை செய்து வருவதாகத் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நேரத்தில் நீட் தேர்வு தேவையா என்பது பற்றியும், நீட் தேர்வு நடத்துவதில் உள்ள
நடைமுறை சிக்கல்கள் பற்றியும் சொல்லும் ‘அஞ்சாமை’ படத்தைத் தந்துள்ளார் இயக்குநர் SP சுப்புராமன். இந்தப் படத்தை மருத்துவர் திருநாவுக்கரசு MD தயாரித்துள்ளார்.
துரதிருஷ்டவசமாக நீட் தேர்வு நடக்கும் மையம் ஜெய்ப்பூர் என்று அறை சீட்டில் வந்துவிடுவதால் தன் மகனை மிகுந்தப் போராட்டங்களுக்கு நடுவில் மதுரையிலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு அழைத்துச் செல்கிறார் சர்க்கார். பயணக் களைப்பாலும், சரியான உணவு கிடைக்காததாலும் ஜெய்ப்பூரில் இறந்துவிடுகிறார். தன் தந்தையின் இறப்புக்கு இந்த நீட் தேர்வும், தேர்வினால் ஏற்பட்ட குளறுபடியும்தான் காரணம் என அரசங்கத்தின் மீது வழக்குத் தொடுக்கிறார் மகன் அருந்தவம். இதற்கு ஒரு காவல் துறை அதிகாரியும் உதவி செய்கிறார். இந்த வழக்கில் விவாதிக்கப்படும் நீட் தேர்வு தொடர்பான சிக்கல்கள்தான் அஞ்சாமை.
புதுகோட்டையிலிருந்தும், விழுப்புரத்திலிருந்தும் நீட் தேர்வில் மாணவர்கள் சாதித்துக்கொண்டிருப்பதாக செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு வழியாகவும் நீட் தேர்வில் நம் தமிழ் மாணவர்கள் வெற்றி பெறுகிறார்கள். இந்தச் சூழ்நிலையில் நீட் எதிர்ப்பு பேசும் ‘அஞ்சாமை’ போன்ற படங்கள் ஏன் என ரசிகர்கள் கேள்விகளை முன்வைக்கிறார்கள்.
நீட் தேர்வு எதிர்ப்பு கதையில் பல படங்கள் தமிழில் வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தைப் பற்றி பேசுவதற்கு முன்னால் நீட் பற்றிப் பார்ப்போம்:
ஏழை எளிய மாணவர்கள் மத்திய அரசின் கல்வியை இலவசமாக பெற நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசால் இந்தியா முழுவதும் நவோதயா பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்டது. இது உண்டு, உறைவிட பள்ளியாகும். ‘ஹிந்தி எதிர்ப்பு’ என்ற ஒற்றைக் காரணத்தால் இந்தப் பள்ளிகள் தமிழ்நாட்டிற்கு வருவதைத் தடுத்துவிட்டார்கள் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள்.
இந்த நவோதயா பள்ளிகள் இருந்திருந்தால் நம் தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் பலர் நீட் தேர்வில் வெற்றிபெற்று மருத்துவர்களாகி இருப்பார்கள். அனிதாக்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கமாட்டார்கள். இந்த விஷயங்கள் எதுவுமே நம் தமிழ் இயக்குநர்கள் நீட் எதிர்ப்பு படத்தில் சொல்வதில்லை. அஞ்சாமை பட இயக்குநரும் இதைச் சொல்லவில்லை