நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்.
கார்த்தி 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பை பெற்றுள்ளது.
இப்படத்தை, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து சூப்பர்ஹிட்டான #96 படத்தை டைரக்ட் செய்த ச. பிரேம் குமார் டைரக்ட் செய்கிறார். அவரே கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார்.96 படம் மூலம் மெகா ஹிட்டான பாடல்களை தந்த இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா மீண்டும் டைரக்டர் ச. பிரேம்குமாருடன் இப்படம் மூலம் கைகோர்க்கிறார்.
இணை தயாரிப்பாளர் – ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் கூறுகையில், “கார்த்தி மற்றும் அரவிந்த் ஸ்வாமி தங்களது சிறந்த நடிப்பை தந்துள்ளனர். இந்த திரைப்படத்தின் இறுதி வடிவத்தை கண்ட இயக்குநர் பிரேம் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
நமது சொந்தங்களின் முக்கியத்துவத்தையும், பண்பாட்டு வேர்களையும் வலியுறுத்தக்கூடிய ஒரு நல்ல குடும்பப் படமாக இது இருக்கும்.” என்று கூறினார்.