“தி லெஜண்ட்” விமர்சனம்
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் தன் வியாபாரத்தில் அடைந்த மாபெரும் வெற்றி அதன் விளம்பரப் படங்களில் தானே நடித்து புகழ் பெற்றதை தொடந்து சினிமாவிலும் ஏன் கதாநாயகனாக நடிக்கக்கூடாது என தோன்றியதால், தன் ஆஸ்தான இரட்டை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி கொண்டு உருவாக்கி உள்ள படம் “தி லெஜண்ட்”

உலகப் புகழ்பெற்ற தமிழக விஞ்ஞானி டாக்டர் சரவணன் தனது கிராமத்தில் பள்ளிக்கூட நண்பராக இருந்து வந்த ரோபோ சங்கர் நீரிழிவு நோய் காரணமாக இறந்து விட, இதே போல் வேறு யாரும் நம் நாட்டில் இறக்கக் கூடாது என்பதற்காக நீரிழிவு நோய்க்கான புதிய மருந்து ஒன்றை ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆனால், அதற்கு எதிராக மருந்து மாஃபியா கும்பல் செய்யும் சதிகளை லெஜண்ட் சரவணன் எப்படி எதிர்க்கிறார் என்பது தான் தி லெஜண்ட் படத்தின் கதை.
பூஞ்சோலை கிராமத்தில் மருத்துவ கல்லூரி நடத்தி வரும் லெஜண்ட் சரவணன் விஞ்ஞானியாக ஏகப்பட்ட ஆராய்ச்சிகளையும் செய்து உலகளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார். அவரது கதாபாத்திரத்திற்கு அப்படியே முரண்பாடாக சுமன் தப்பான மருந்துகளை கண்டுபிடித்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி வருகிறார். இந்த மருந்து மாஃபியா கும்பலை எப்படி அடித்து துவம்சம் செய்கிறார் லெஜண்ட் சரவணன் என்பதை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி பிரம்மாண்டமாக சொல்லி உள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை, ஜேடி ஜெர்ரி இயக்குநர்களின் பிரம்மாண்ட மேக்கிங், ஊர்வசி ரவுத்தேலாவின் கவர்ச்சி, விவேக் நகைச்சுவை, யோகி பாபு சில இடங்களில் செய்யும் காமெடி, நல்ல மெசேஜ் உள்ளிட்ட பல பிளஸ்கள் உள்ளன. யாஷிகா ஆனந்த் உடன் ஆடும் மொசலு மொசலு பாடல் மற்றும் ராய் லக்ஷ்மியுடன் நடனமாடும் வாடி வாசல் வாடி பாடல்களும் மிக அருமையாக உள்ளன.
இளைய திலகம் பிரபு, நாசர், விஜயகுமார், லதா, விவேக், யோகி பாபு, ரோபோ சங்கர், தேவதர்ஷினி, சுமன் என நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
நல்ல கருத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்கிற முனைப்பு மற்றும் சினிமா மீது அவருக்கு ஆர்வம் எல்லாமே அவரது நடிப்பில் நன்றாகவே தெரிகிறது.
தி லெஜண்ட் திரைப்படம்.
PH:9994667873