‘ஜெயிலர்’ – விமர்சனம்
முன்னணி நடிகரான தளபதி விஜயை வைத்து பீஸ்ட் என்ற தோல்வி படம் தந்த இயக்குனர் நெல்சன் சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கியிருக்கும் படம் ‘ஜெயிலர்’.
முதல்ல சூப்பர் ஸ்டார் பட்டம் பற்றி..!
ஏன் அது ரஜினிகாந்த் கிட்டயே இருக்குன்னு கேள்வி கேட்கிற எல்லோருக்குமே இந்த படத்துல அருமையான விடை கொடுத்திருக்கிறார் ரஜினிகாந்த் (வயது-73)..
எஸ்பிபி குரலில் பாடல் ஆயிரம் பேர் சுற்றி ஆடல் என ‘என்ட்ரி சாங்’, காலை உயர்த்தி சுற்றினால் கீழே சுழலும் புயல்,இளம் ஹீரோயினோடு டூயட், ‘லல்லல் லல்லல்லா…’ என உற்சாகமாக துள்ளி ஓடுதல் என வழக்கமான ரஜினியிஸங்களைத் துறந்து விட்டு வயதுக்கேற்ற பாத்திரத்தில் நிறைய உடல் மொழி காட்டும் ரஜினிக்கு ஒரு பூச்செண்டு. சாதாரணமாகத் துவங்கும் படத்தில் சாதாரணமாக வந்து இணைந்து கொள்கிறார் ரஜினி. அதன் பிறகு மொத்த படமும் அவரே.
‘சின்ன டைனோசர்தான் பேசறதே!’ தொடங்கி படம் முழுக்க ரசிகர்கள் கொண்டாடும் காட்சிகள் பல உண்டு. தளபதி, கபாலி போல ரஜினிக்கு நிறைய தெளிவான முகபாவங்கள் கொண்ட படம்.
படத்தில் பல இடங்களில் ரஜினி ரசிகர்களுக்கு விருந்து.
ரஜினிக்கு அடுத்த படியாக படத்தை ஆக்கிரமிப்பவர் அந்த மலையாள மொழி பேசும் வில்லன் விநாயகன். ஆசிட் தொட்டியோ, ஆர்பரிக்கும் வில்லத்தனமோ, அப்படியே பத்து ரூபாய் பிச்சை எடுப்பதோ அனைத்திலும் அள்ளுகிறார், ரத்தம் தெறிக்க தெறிக்க.
சாதுவான முத்துவாக இருக்கும் ரஜினி, ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனாக மாறும் காட்சி முதல் கிளைமாக்ஸ் வரை திரைப்படம் எங்குமே தொய்வடையவில்லை,”
மேலும், யோகி பாபு அடிக்கும் கவுன்ட்டர்களை மற்ற பெரிய நடிகர்கள் ரஜினியை போல் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகமே
அனிருத் பாடலிலும், பின்ணணியிலும் பட்டையைக் கிளப்புகிறார்.
இந்தி நடிகர் ஜாக்கிஷெராப் வரும் காட்சியில் அனல் பறக்கின்றது திரையில்.
மலையாள நடிகர் மோகன்லால் ரஜினிகாந்த் கட்டிப்பிடித்து வசனம் பேசும் அந்த காட்சி அற்புதம் .அதிலும் NH47ல் கண்டெய்னர் உடன் நடந்து வரும் அந்த நடை பின்னி எடுக்கிறார் மோகன்லால்.
கடைசி 45 நிமிடத்தில் பரபரவென்று பற்றிக் கொள்கிறது. ‘சிறையதிகாரி நாட்டின் கேங்ஸ்டர்களோடு கூட்டணியில் இருப்பாரா?’ போன்ற லாஜிக் கேள்விகள் வரவே செய்கின்றன. சுனில் – வைபவ் – தமன்னா காட்சிகளை நறுக்கினால் படம் வேகமெடுக்கும் என்ற எண்ணம் வரவே செய்கிறது. திரையிலிருந்து நம் முகத்தில் ரத்தம் தெறிக்கும் அளவிற்கு படத்தில் ரத்தம்.
நெல்சன் தானும் தப்பித்து படத்தையும் காப்பாற்றி விட்டார். படம் முழுக்க திரை முழுக்க ரஜினி.
எங்கும் இதே குரல், மக்கள் மனதில் என்றும் நீங்காது இந்த ஜெயிலர்.