ஜீவன் – நட்டி இணைந்து கலக்கும் புதிய படம் ‘ எம்.எஸ். முருகராஜ் தயாரிக்கும் “சிக்னேச்சர்”.
“M10 PRODUCTIONS” சார்பில் தயாரித்த M.S.முருகராஜ் தயாரிக்கும் மூன்றாவது பிரமாண்ட படத்திற்கு “சிக்னேச்சர்” என்று பெயரிட்டுள்ளார்.
சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டா வை திருடும் கேரக்டரில் “திருட்டுப்பயலே” ஜீவன் நடிக்கிறார்.
அதே டேட்டா வை பயன்படுத்தி மக்களை வேட்டையாடு பவராக, “சதுரங்கவேட்டை” நட்டி நடிக்கிறார்.
இவர்கள் இணைந்து செய்யும் ‘சீட்டிங்’ தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம்.

விநாயகர் சதுர்த்தி இன்று பூஜையுடன் படபிடிப்பு ஆரம்பமானது. முதல் நாள் படபிடிப்பில் நாயகர்கள் ஜீவன், நட்டி கலந்து கொண்டார்கள். தொடர்ந்து ஒரே கட்ட படபிடிப்பாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது. பூஜையில் டைரக்டர் ஹரி, நடிகர் ஹரிஷ் பேரடி கலந்து கொண்டார்கள்.