ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்சனின் ,திகில் கதையின் நாயகனாக ஆர்.பாண்டியராஜன் நடிக்கும் ” ரியா “ (தி ஹாண்டட் ஹவுஸ்)
பழைய இருட்டுபாளையம் என்ற ஊரில் பேய் பங்களா ஒன்றில், தினம் தினம் நடக்கும் பலவித அமானுஷ்ய சம்பவத்தால் அந்த ஊர் மக்கள் பல்வேறு விபரீத பாதிப்புகளால் சிக்கிதவிக்கின்றனர் . இதை பயன்படுத்தி ஒரு கும்பல் அங்கு , அதையே தனக்கு சாதகமாக்கிக்கொண்டு ஊர்மக்களிடத்தில் பயத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கச்செய்து சட்டவிரோத காரியங்களில் ஈடுபட்டு மர்மமாக மாயமாகிவிடுகின்றனர் , இந்த பின்னனியில் நடந்தது என்ன ? அவர்கள் அங்கு என்ன செய்தார்கள் , அவர்கள் என்ன ஆனார்கள் ? வெளிநாட்டிலிருக்கும் ,
அந்த பேய் பங்களாவின் உரிமையாளர் பாண்டியராஜன் திரும்ப அந்த ஊருக்கு வந்தாரா , பங்களாவுக்கு சென்றாரா , என மர்மமான கேள்விகடங்கிய திகில் சம்பவத்துக்கு விடைதான் படத்தின் கிளைமாக்ஸ் .

