ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

by Tamil2daynews
October 27, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஹாட்ரிக் வெற்றியில் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த கார்த்தி !

 

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான கார்த்திக்கு இந்த வருடம் அவரது திரை வாழ்வில் பொன்னான வருடமாக அமைந்துள்ளது. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் தீபாவளி ரிலீசாக வெளியான ‘சர்தார்’ படங்கள் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளன. சர்தாரின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக, சர்தார் பட வெற்றிவிழா சந்திப்பில் நடிகர் கார்த்தி அறிவித்தார்.
Full Video: Sardar Movie Grand Success Meet | Sardar Success Meetஇவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியான விருமன் படத்தில் கரடுமுரடான தோற்றத்தில் கிராமத்து மனிதனாக மிரட்டியிருந்தார் கார்த்தி. அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவின் நீண்ட வருட கனவு திரைப்படமாக, இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை பாத்திரமான வந்தியதேவன் பாத்திரத்தில், அப்படியே ராஜா காலத்து ஒற்றனாக மக்களின் மனம் கவர்ந்தார். இதைத்தொடர்ந்து தீபாவளி கொண்டாட்டமாக வெளியான சர்தார் படத்தில் தந்தை, மகன் என இரட்டை வேடத்தில் உளவாளி கதாப்பாத்திரத்தில் நடித்து அனைவரது நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டுள்ளார். மாறுபட்ட கதைக்களம், விதவிதமான கதாப்பாத்திரம்  என ஒவ்வொரு படத்திலும் அசத்தி வருகிறார் கார்த்தி. கார்த்தி படம் என்றால் நம்பி தியேட்டர் போகலாம் எனும் கருத்தை மக்கள் மனதில் அழுத்தமாக பதித்து, தனக்கென தனியொரு இடத்தை பிடித்துள்ளார்.
தீபாவளிக்கு வெளியான சர்தார் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, எட்டுத்திக்கும்  ‘சர்தார்’ பேச்சாகவே இருந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளார் கார்த்தி. அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பையடுத்து ரசிகர்கள் இச்செய்தியினை கொண்டாடி வருகின்றனர்.

விழாவில், தயாரிப்பாளர் பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்‌ஷ்மன்,டைரக்டர் பி.எஸ்.மித்ரன்,ரெட் ஜயண்ட் செண்பக மூர்த்தி,இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்,எடிட்டர் ரூபன்,கலை இயக்குநர் கதிர், ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன், வசனகர்த்தா பொன் பார்த்திபன்,சிறப்பு ஒப்பனையாளர் பட்டணம் ரஷீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Previous Post

சங்கராந்தி கொண்டாட்டத்தில் பான் இந்தியா படமாக வரும் ‘ஏஜெண்ட்’..!

Next Post

‘குரங்கு பெடல்’ பட குழுவினர்களின் மகிழ்ச்சியான தருணம்..!

Next Post

'குரங்கு பெடல்' பட குழுவினர்களின் மகிழ்ச்சியான தருணம்..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

    0 shares
    Share 0 Tweet 0
  • அயலி வெப் தொடர் விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

    0 shares
    Share 0 Tweet 0
  • உழவர்களை கௌரவப்படுத்தும் கார்த்தியின் ‘உழவன் ஃபவுண்டேஷன்’..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

“குற்றம் புரிந்தால்” நீதியை கையில் எடுக்கும் ஹீரோ!

January 26, 2023

பல பெண்களின் முழு வாழ்க்கையும் சமையலறையிலேயே கழிந்து விடுகிறது..” – தி கிரேட் இந்தியன் கிச்சன் ஐஸ்வர்யா ராஜேஷ்.

January 26, 2023

உழவர்களை கௌரவப்படுத்தும் கார்த்தியின் ‘உழவன் ஃபவுண்டேஷன்’..!

January 26, 2023

புதிய வரலாறை உருவாக்கிய பதான்

January 26, 2023

அயலி வெப் தொடர் விமர்சனம்.

January 26, 2023

பார்சா பிக்சர்ஸ் P.R. மீனாக்‌ஷி சுந்தரம் & பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் I B கார்த்திகேயன் வழங்கும் கெளதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியது

January 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!