• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

கெழப்பய – விமர்சனம்

by Tamil2daynews
September 15, 2023
in விமர்சனம்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
கெழப்பய  – விமர்சனம்

ஒரு கர்ப்பிணி பெண்ணை நான்கு பேர் சேர்ந்து, ஒரு காரில் கூட்டிசெல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் வழியில் ஒரு கிழவன் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கிறார். அந்த கிழவன் இந்த காருக்கு வழி கொடுக்காமல் செல்கிறார். அந்த காரிலிருந்து ஹாரன் அடித்தும், கிழவன் அசருவதாக தெரியவில்லை. வழி விடுவதாகவும் தெரியவில்லை.

ஒருகட்டத்திற்கு மேல் கடுப்பாகி அந்த கிழவனிடம் சண்டையிடுகின்றனர். அப்படி சன்டையிட்ட பிறகும், கிழவன் வழிவிடவில்லை, இதற்கடுத்து இவர்களுக்குள் என்ன ஆயிற்று என்பதும். கிழவன் அந்த காருக்கு வழி விடாததற்கு என்ன காரணம் என்பதே படத்தின் மீதி கதை…
தயாரிப்பாளரே படத்தின் கதாநாயகன்.இவர் அந்த கார் ஓட்டும் காட்சியில் கர்ப்பிணிப் பெண் கூட இருந்தும் பின்னால் வரும் வண்டிகளுக்கு ஏன் வழி விடவில்லை என்று இவர் மீது கோபம் வருவது உண்மை.அவ்வளவு அடி வாங்கியும் இவர் ஏன் இப்படி இருக்கிறார் என்று படம் பார்பவர்களை நினைக்க வைக்கும் ஆனால் உண்மை தெரிந்த பிறகு ஐயோ பாவம் இவரின் நடிப்பு கனக்கச்சிதம்.
படத்தில் இவருடைய பங்கு சூப்பர் என்று தான் சொல்ல வேண்டும்.படம் முழுவதும் பேசாமல் நடித்ததுடன்  அடிக்கும் அக்னி வெயிலில் நடிப்பு, உழைப்பு இரண்டையும் கொட்டி படம் பார்ப்பவர்களின் பாராட்டை பெறுகிறார் தயாரிப்பாளர், நடிகர் கதிரேச குமார்.
படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தேர்வு மிக அருமையாக உள்ளது.

பின்னணி இசையும் படத்திற்கு ஏற்றவாறு உள்ளது.

வயதானவர்களுக்கு  வயசாயிடுச்சு என்ற கவலை இல்லாமல் நம்மால் முடிந்த வித்தையை தெரிந்து கொண்டு தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்ற தன்னம்பிக்கையை வயதானவர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும் இந்த படம்.

முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாம் பாதியில் சற்று குறைவு தான் இருந்தாலும் படத்தின் பட்ஜெட்டை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் சிறிய பட்ஜெட்டில் ஒரு சிறப்பான படம் எடுத்திருக்கும் இவர்களை வரவேற்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘கெழப்பய’ னுக்கு வயசாகவில்லை.

இயக்கம் – யாழ் குணசேகரன்
நடிகர் – கதிரேச குமார்,
இசை – கெபி
ஒளிப்பதிவு – அஜித்குமார்
எடிட்டர் – ராஜேஷ்
                 விமர்சகர்
                 சரண்
Tags: kezhapayakezhapaya-tamil-moviekezhapaya-tamil-movie- stillskezhapaya-tamil-movie-reviewகெழப்பய - விமர்சனம்
Previous Post

சரும பராமரிப்பு அழகு சாதன பொருட்களின் உற்பத்தி துறையில் அடியெடுத்து வைக்கும் நயன்தாரா

Next Post

ஹைதராபாத்தில் “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!

Next Post

ஹைதராபாத்தில் “உஸ்தாத் பகத் சிங்” திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இடைவெளியே இல்லாமல் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது!

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.