ஒரு நல்ல தமிழ் படத்தை கெடுத்த பவண்கல்யாண்..!
பொதுவாகவே வாழ்க்கையில எல்லாமே இரண்டா இருக்கும்.அண்ணன் இருந்தார்னா தம்பி இருப்பாரு அக்கா இருந்தா தங்கை இருப்பாங்க ஏன் நம்பர்ல கூட ஒண்ணுனா அதன்பிறகு இரண்டு தான்.
அப்படி இருக்கும் போது நல்லவன் ஒருவன் இருந்தான்னா நிச்சயமா கெட்டவன் அப்படின்னு ஒருத்தன் நிச்சயமா இருப்பான்.இதே தான் சினிமாவுலயும் நல்ல படம் கெட்ட படம் இருவகை உண்டு.
அப்படி தமிழ்ல பெரிய மெகா ஹிட்டான படங்களை ரீமேக் பண்றோம் அப்படின்னு வாங்கி அந்த படத்தை எவ்வளவு நார் நார கிழிக்கணுமோ, எந்தளவு சொதப்பு சொதப்புன்னு சொதப்புனுமோ அந்த அளவுக்கு போட்டு சொதப்புவதில் நம்பர் ஒன்னு இடத்துல கன்னட தயாரிப்பாளர்களையும், நடிகர்களையும் சொல்லலாம்.

தெலுங்கு நடிகர்களையும் தெலுங்கு தயாரிப்பாளர்களையும் சொல்லலாம் ஆனால் அங்கேயும் மெகா ஹிட் படம் நல்ல படங்கள் வந்திருக்கு அங்க இருந்து நம்ம தமிழ்ல வாங்கி இங்கேயும் வெற்றி அடைந்த படங்கள் ஏராளமா இருக்கு.
யாரோ ஒரு சிலர் செய்ற தப்புக்காக ஒட்டுமொத்தமா அந்த படம் பார்க்க கூடிய ரசிகர்களும் அந்த படத்தோட டீசர் பார்த்தா வெச்சி செய்யறாங்க.
அப்படி ஒரு படத்தை தான் இந்த செய்தி தொகுப்பில் இன்னைக்கு நம்ம பாக்க போறோம்
ஓடிடி யில் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களின் மனம் கவர்ந்த மிக அற்புதமான படம்.
பவன் கல்யாண் நடிப்பில் ‘ப்ரோ’ என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.
இதன் டிரைலரில் இடம்பெற்ற சண்டைக்காட்சியால், நல்ல கதையை மசாலா திரைப்படமாக மாற்றிவிட்டனரே என விமர்சனம் எழுகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்தை ரீமேக் செய்யும் போதும் பவன் கல்யாண் இதே தவறை செய்தார் என்கிறனர் ரசிகர்கள்.
ஒரு படத்துக்கு ஐந்து கோடியாகட்டும் 500 கோடி ஆகட்டும் ரசிகர்களுக்கு பிடிக்கலன்னா தூக்கி எறிஞ்சிடுவாங்க