இயக்குனராக அறிமுகமாகும் ஜோஜு ஜார்ஜ்! வெளியானது மோஷன் போஸ்டர்!
ஜோஜு ஜார்ஜ் பிறந்தநாளை முன்னிட்டு அவர் முதன் முறையாக இயக்கிய ‘பனி’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தளராத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியால் 24 ஆண்டுகால சினிமா பயணத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளார் ஜோஜு ஜார்ஜ். அவரது சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்பு முனையாக “ஜோசப்” படத்தின் வெற்றி அமைந்தது. ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிபடுத்தி இருந்தார். இந்த படம் அவருக்கும் நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் “பொரிஞ்சு மரியம் ஜோஸ்” படம் அவரை ஒரு ஆக்சன் ஹீரோவாக உருவாக்கியது. “ஜோசப்” படம் தேசிய விருது குழுவின் சிறப்பு ஜூரி குறிப்புடன் பாராட்டுகளை பெற்றது. ஜோஜு ஜார்ஜ் கடைசி வரை தேசிய விருதுக்காக போட்டியிட்டார்.

ஜோஜு ஜார்ஜ் மற்றும் அபிநயா தவிர, சீமா, சாந்தினி ஸ்ரீதரன், அபயா ஹிரண்மயி, சோனா மரியா ஆபிரகாம், மெர்லட் ஆன் தாமஸ், லங்கா லட்சுமி, சாரா ரோஸ் ஜோசப், பாபு நம்பூதிரி, பிரசாந்த் அலெக்சாண்டர், சுஜித் சங்கர், ரஞ்சித் வேலாயுதன், பிட்டோ டேவிஸ், ரினோஷ் ஜார்ஜ், இயன் மற்றும் இவான் , அன்பு , ரமேஷ் கிரிஜா, டோனி ஜான்சன், பாபி குரியன் மற்றும் பிக் பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சாகர் மற்றும் ஜுனைஸ் ஆகியோர் படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஒளிப்பதிவை பிரபல இயக்குனர் வேணுவும், படத்தொகுப்பை மனு ஆண்டனியும், இசை விஷ்ணு விஜயா கையாள்கின்றனர்.
ஒலி வடிவமைப்பு: அஜய் அதாத், தயாரிப்பு வடிவமைப்பு: சந்தோஷ் ராமன், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: ஜெயன் நம்பியார், ஒப்பனை: எம்.ஜி. ரோஷன், சமீர் ஷாம், ஆடை: சமீரா சனீஷ், தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: தீபக் பரமேஸ்வரன், ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன், நடனம்: சந்தியா மாஸ்டர், ஷிஜித், பார்வதி மேனன், முதன்மை இணை இயக்குனர்: அனில் மேத்யூ, இணை இயக்குனர்: ரதீஷ் பிள்ளை, ஜாபர் சனல், நிஷாத் ஹாசன். விநியோகம்: ஆண்டோ ஜோசப் பிலிம் நிறுவனம், இணை தயாரிப்பு: வர்கி ஜார்ஜ், நிர்வாகத் தயாரிப்பாளர்: அக்னிவேஷ் ரஞ்சித், VFX: Luma FX