சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நகைச்சுவை நடிகர் எஸ் வி சேகர் நடிகர் ரஜினிகாந்த் குறித்து பேசிய பேச்சு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்தும் எனக்கும் ஒரே வயது தான். சென்னைக்கு ரஜினி வந்தபோது ஆல் இந்தியா ரேடியோவில் அவரது குரலை நான் தான் பதிவு செய்தேன். அதற்காக நான் ரஜினி போல இருக்க வேண்டும் அது எந்த ஒரு கட்டாயமும் கிடையாது.
சிவாஜியைப் போல உலகத்திலேயே தேடினாலும் எந்த ஒரு நடிகரும் கிடைக்க மாட்டார்கள். அதேபோலத்தான் எம் ஜிஆரும் அந்த மூன்று எழுத்துக்கு ஒரு மந்திரம் உள்ளது எம்ஜிஆர், சிவாஜியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் அந்த மூன்றெழுத்து மந்திரமாக உள்ளார்.
ஜெயிலர் படம் வந்தபோது மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு போனார்கள். அந்த படம் மிகப்பெரிய வசூல் சாதனை செய்துள்ளது. நானும் சாதித்திருக்கேன். 25 டிராமா 7000 ஷோக்கள் உலகம் முழுக்க இந்த சாதனையை வேற யாராலும் முறியடிக்க முடியாது.
அடுத்தவங்களை பார்த்து பொறாமை படக்கூடாது. நாம என்ன செய்கிறோம் நாம என்ன சாதிக்கிறோம் என்பதில் தான் தெளிவாக இருக்க வேண்டும். அதை வைத்து சந்தோசப்படுபவனே சிறந்த மனிதன். என் பேர்ல எந்த ஒரு கடனும் இல்லை அதுதான் நான் சம்பாதிச்ச சொத்து.