மில்லியன் இதயங்களை வென்ற ‘டங்கி டிராப் 1’ டங்கி திரைப்படத்தின் முதல் பார்வை
ராஜ்குமார் ஹிரானியின் மனதைக் கவரும் தருணங்களுடன், SRK இன் வசீகரமும் இணைந்து நம் மனதில் மேஜிக்கை நிகழ்த்தியிருகிறது! ‘டங்கி டிராப் 1’ வெளியான 24 மணிநேரத்திற்குள் அனைத்து தளங்களிலும் 72 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது_
டங்கி திரைப்படத்தின் முதல் பார்வையான, “டங்கி டிராப் 1” வெளியான வேகத்தில், மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களை கவர்ந்திழுத்திருக்கிறது. இந்த வீடியோ,ராஜ்குமார் ஹிரானி வடிமைத்திருக்கும் அற்புதமான உலகத்தைப் பற்றிய ஒரு சிறு அறிமுகப்பார்வையை நமக்குத் தருகிறது, இது இதயம் வருடம் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. நிஜ வாழ்க்கை அனுபவங்களிலிருந்து உருவாக்கப்பட்ட இக்கதை, ஒரு கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.
சோனு நிகாமின் மாயாஜாலக் குரல், ராஜ்குமார் ஹிரானி மற்றும் படக்குழுவினருடன் இணைந்த SRK வின் மயக்க்கும் வசீகரம், என இப்படத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். நட்பு, நகைச்சுவை, சிரிப்பு ஒரு துளி கண்ணீர் என அனைத்து உணர்வுகளாலும் நம்மை மூழ்கடித்து, நம் இதயங்களில் உண்மையிலேயே ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது “டன்கி டிராப் 1”!
மனதைக் கவரும் உணர்ச்சிகளைத் தூண்டி, ராஜ்குமார் ஹிரானியின் சினிமாவின் அழகை எடுத்துக்காட்டி, ஷாருக்கானுடன் இணைந்து நடித்துள்ள பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட மிகவும் திறமையான நடிகர்களின், வண்ணமயமான கதாபாத்திரங்களுடன், உங்களை ஒரு ரோலர்-கோஸ்டரில் பரபரப்பான பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.