தந்தை இல்லாத தனது மகளான கெனியை மிகவும் கவனமாக வளர்த்து வருகிறார் ஆனந்தி.
ஹீரோவாக வரும் ராஜ்நிதன், கெனி மீது ஒரு தலைக் காதலில் விழுகிறார். அவரிடம் தன் காதலை கூறுகிறார் ராஜ் நிதன். ஆனால், கெனி அவரது காதலை நிராகரிக்கிறார். ராஜ் நிதனை தொடர்ந்து இன்னும் இரண்டு இளைஞர்களின் காதலையும் நிகாரிக்கிறார். தொடர்ந்து ஆண்களை கண்டாலே வெறுப்பைக் காட்டி வருகிறார் கெனி.
பணத்திற்கு என்ன செய்வது என்றறியாமல் விழி பிதுங்கி நிற்கிறார் கெனி. காதலிப்பதாக கூறிய மூன்று இளைஞர்களிடம் உங்களை காதலிக்க வேண்டுமென்றால் எனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்றும் அப்படி கொடுத்தால் மட்டுமே காதலிப்பேன் என்றும் கூறி ஏமாற்றுகிறார் கெனி.
மூன்று இளைஞர்களும் தலா 1 லட்சம் ரூபாயை கொடுத்து விடுகிறார்கள். ஆனந்திக்கு நல்லபடியாக ஆப்ரேஷன் முடிந்துவிட, பழைய நிலைக்கு வந்து விடுகிறார்.
கெனி செய்த செயலைக் கண்டு அதிர்ச்சியடையும் ஆனந்தி, மூவரையும் அழைத்து தன் மகள் மூவரையும் ஏமாற்றி தான் பணம் பெற்றார் என்று நடந்தவற்றைக் கூறுகிறார்.
ஆனால், என் வாழ்க்கையில் ஆண்களே வேண்டாம் என்று மூவரையும் நிராகரிக்கிறார் கெனி.
கெனி ஆண்களை வெறுக்க என்ன காரணம்.? அவரது வாழ்க்கையில் அப்படி என்னதான் நடந்தது.?? கெனி யாரை திருமணம் செய்து கொண்டார்.??? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனாக ராஜ்நிதன், கதைக்கேற்ற நாயகனாக ஜொலித்திருக்கிறார். தனது பெற்றோர்களிடம் பாசம் காட்டுவதாக இருக்கட்டும், தனது காதல் மீது வைத்திருந்த நம்பிக்கையாக இருக்கட்டும் என சில இடங்களில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் ராஜ்நிதன்.
இவர்களைத் தொடர்ந்து கும்கி ஆனந்தியும் படத்தின் பிற்பாதியில் தனது கேரக்டரை பூர்த்தி செய்யும் நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.