இயக்குனர் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரனை வைத்து இயக்கி வரும் படத்திற்கு ஆர்சி – 15 என தற்காலிகமாக பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், ரகுமான் என பலர் நடிக்க தமன் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பை நடத்த தயாராகி வருகிறார் இயக்குனர் ஷங்கர்.
அரசியல் கலந்த திரில்லர் கதையில் உருவாகிவரும் இந்த படம் ரூ. 170 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை ரூபாய் 200 கோடிக்கு ஜீ நெட்வொர்க் நிறுவனம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.