
திரைச்சுவை என்னும் பத்திரிகையில் சப் எடிட்டராக பணியாற்றினேன். ரஜினி முதல் அனைவரையும் பேட்டி எடுத்திருக்கிறேன். ஜெயம் ராஜாவின் ரசிகன் நான். சிரஞ்சீவியை வைத்து படம் இயக்கி வருகிறார். தெலுங்கில் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளில் இப்படமும் இருக்கிறது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். விழாவிற்கு வந்ததற்கு நன்றி.
இப்படத்தின் கதையை அம்மு அபிராமியின் அப்பாவிடம் கூறும்போது, அம்மு அபிராமி படத்தின் முழுக் கதையையும் கேட்டார். அம்மு அபிராமி அப்பாவிடம் நேரில் அழைத்து வாருங்கள் என்று கூறினேன். அவருடைய பாத்திரத்தைப் பற்றி 10 நிமிடங்கள் கூறினேன். அதன்பிறகு படத்தின் கதையைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட கேட்கவில்லை. அவருடைய நடிப்பை சரண் நடிகை சரிதாவுடன் ஒப்பிட்டார். நான் நடிகை ரேவதியுடன் ஒப்பிடுகிறேன். இயக்குனர் மாதையனுக்கு மிக்க நன்றி. அன்பே அன்பே படத்திற்கு நான் கேட்பதையெல்லாம் கொடுத்தார்கள். ஆனால், நான் தான் சரியாக எடுக்கவில்லை. ஆனால், மாதையன் சார் இந்த படத்திற்கு என்ன தேவையோ அதை செய்துக் கொடுத்தார். படம் முடிக்கும் வரை எந்தவிதத்தலும் தலையிடவில்லை.
நான் செய்த புண்ணியமோ அல்லது என் அப்பா அம்மா செய்து புண்ணியமோ தெரியவில்லை. இயக்குனர் வெற்றி மாறன், நடிகர் சூரி மற்றிம் பலரும் இங்கு வந்திருக்கிறார்கள்.
தற்போது, வெற்றிமாறன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகராக இருந்து கதாநாயகனாக உயர்ந்திருக்கிறார். இந்த வருடத்தில் எத்தனை விருதுகள் வெல்ல போகிறார் என்று தெரியவில்லை.
நடிகர் செங்குட்டுவன் முதல் படத்திலேயே கூட்டத்தை சேர்த்து விட்டார். நடிப்புடன் தயாரிப்பு பணிகளையும் பார்த்துக் கொண்டார். இப்படத்திற்காக எதை செய்யலாம் என்று யோசனை கேட்டால், எது சிறந்ததோ அதைத்தான் தேர்வு செய்வார். அதுவே எனக்கு இப்படம் சிறப்பாக இயக்குவதற்கு உறுதுணையாக இருந்தது.
வெற்றிமாறனின் விடுதலை வெற்றியடைய வாழ்த்துகள் சார். ஜெமினியில் பணியாற்றியதால் அன்பே அன்பே படம் கிடைத்தது. சரண் சார் இப்போது ஒரு படம் இயக்க இருக்கிறார். அப்படம் நிச்சயம் வெற்றியடையும். பன்னீர் செல்வமும் ஐஸ்வர்ய முருகன் என்ற படத்தை இயக்குகி இருக்குகிறார். வாரியார் படத்திற்கு பிறகு வெளியாகும்.
பிருந்தா சாரதி லிங்குசாமியின் ரன் படத்தைத் தவிர அனைத்து படங்களுக்கும் அவர் தான் வசனகர்த்தா. சாகித்ய அகாடமி விருது வாங்கும் தகுதி வாய்ந்தவர். வசந்தபாலனும் ஒரே இடத்தில் தான் தங்கியிருந்தோம். என்னைவிட பெரிய டைரக்டரை விழாவிற்கு கூப்பிட வேண்டியது தானே என்றார். வெயிலோ, அங்காடித் தெருவோ அவர்கள் எடுக்கவில்லையே என்றேன். உடனே வந்துவிட்டார். அநீதி என்று படம் இயக்கி வருகிறார்.வாழ்த்துக்கள் எம்.எஸ்.பாஸ்கர் வியந்து பார்க்கக் கூடிய நடிகர் அதில் எந்த சந்தேகமுமில்லை.
ஒளிப்பதிவாளர், சதுரங்கவேட்டைக்குப் பிறகு 10 படங்கள் முடித்துவிட்டார். இப்படத்திற்கு பாராட்டு வந்தால், அதற்கு அவரும் முக்கிய காரணம்.
இப்படத்தில் அறிமுகமாகியிருக்கும் கன்னட நடிகர் ராஜ் தீபக் செட்டி இவர் போல வருவார்.
சித்தார்த் விபின் சிறப்பான இசையமைத்திருக்கிறார். மதன்பாப் சார் எனக்காக ஒரு விளம்பர படம் நடித்துக் கொடுத்தார். இங்கு வந்ததிற்கு நன்றி.
கலை இயக்குனரும் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். சினேகன் சாரும் மிகவும் உறுதுணையாக இருந்தார். இப்படத்திற்கு சிறுமி கதாபாத்திரத்திற்காக தேடும்போது, கைதி படத்தில் நடித்த மோனிகாவை கேட்டோம். கதை பிடித்தால் தான் நடிப்போம் என்று அவர் அம்மா கூறினார். 1 மணி நேரம் கதை கேட்ட பிறகு ஒப்புக் கொண்டார்கள். படம் பார்த்துவிட்டு 1 மணி நேரம் பேசினார். அந்தளவிற்கு அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. மாரிமுத்து என்னுடைய சிறந்த நண்பர்.