யஷ்ராஜ் பிலிம்ஸ் இந்த பண்டிகை சீசனில் தங்களது லேட்டஸ்ட் ஸ்பை யுனிவர்ஸ் படமான ‘டைகர் 3’யை வழங்குவதன் மூலம் கட்டண கவுன்டர்களை நிறைக்க தயாராகிறது. சூப்பர் ஸ்டார்களான சல்மான் கான் மற்றும் கத்ரீனா கைப் நடித்துள்ள ‘டைகர் 3’ தீபாவளி பண்டிகையில் நவ-12 ஞாயிறன்று வெளியாகிறது. ‘டைகர் 3 வெளியாகும்’ தினத்தன்று காலை 7 மணியில் இருந்து காட்சிகள் திரையிடப்பட துவங்குகிறது என்கிற செய்தியை தயாரிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் இந்தியாவில் நவ-5ல் இருந்து ‘டைகர் 3’க்கான முன்பதிவை யஷ்ராஜ் பிலிம்ஸ் துவங்க இருக்கிறது. தீபாவளி விடுமுறையில் இப்படம் வெளியாவதால் யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களுக்கென்றே இருக்கும் ரசிகர்கள், படம் குறித்த தேவையற்ற தகவல்கள் வெளியாவதை தவிர்ப்பதற்காக திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிகாலை காட்சிகளை நடத்துமாறு கூறியதால் திரையரங்குகளும் முன்கூட்டியே காட்சிகளை திரையிட வேண்டுகோள் வைத்திருக்கின்றன.
ஏக் தா டைகர், டைகர் ஜிந்தா ஹை, வார் மற்றும் பதான் படங்களை தொடர்ந்து யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வெற்றிப்படங்களின் வரிசையில் 5வது படமாக ‘டைகர் 3’ உருவாகியுள்ளது. யஷ்ராஜ் பிலிம்ஸின் ஆதர்ஷ இயக்குனரான மனீஷ் சர்மா இப்படத்தை இயக்கியுள்ளார்.
மல்டிபிளக்ஸ் பிரிமியம் திரையரங்குகளில் ‘டைகர் 3’யை கீழ்க்கண்ட வடிவமைப்புகளில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்கமுடியும்
– 2D
– IMAX 2D
– 4DX 2D
– PVR P[XL]
– DBOX
– ICE
– 4DE Motion
யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே மிகப்பெரிய வெளியீடாக இருக்கும் விதமாக ‘டைகர் 3’யை வெளியிடும் பணியில் யஷ்ராஜ் பிலிம்ஸ் இறங்கியிருக்கிறது. ஹிந்தி மட்டுமல்லாது, தமிழ் மற்றும் தெலுங்கு டப்பிங் வெர்ஷன்களிலும் இப்படத்தை பார்த்து ரசிக்க முடியும்.