ராஜாஜி – சுஷ்மாராஜேந்திரா பிரியங்கா அருண் மோகன் நடிக்கும் ” டிக் டாக்”
உலகம் முழுவதும் மக்கள் நிறைய பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் பிரசித்தி பெற்ற பெயர் ” டிக் டாக்” எம்.கே. எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் அந்த பெயரில் இளைஞர் இளைஞிகளை கவரும் வகையில் அந்த பெயரில் படத்தை தயாரிக்கிறது.
இதில் ராஜாஜி நாயகனாகவும், சுஷ்மாராஜேந்திரா நாயகியாகவும், பிரியங்கா அருண் மோகன் இன்னொரு நாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் முருகானந்தம், சாம்ஸ், நமோ நாராயணா , வினோதினி, சஞ்சனா சிங், மது சூதனன் மற்றும் பலர் இதில் உள்ளனர்.
டோனி செயின் மற்றும் முருகன் செல்லப்பா இருவரும் ஒளிப்பதிவையும், ரொசாரியா இசையையும், ராஜேஷ் செல்வராஜ் படத்தொகுப்பையும், பிரபு சதீஷ் நிர்வாக தயாரிப்பையும் , சுரேஷ் மாரிமுத்து இணை தயாரிப்பையும், பிரபு சதீஷ் இணை இயக்கத்தையும், கவனித்துள்ளனர்.
எம்.கே.எண்டர்டெய்ன் நிறுவனம் சார்பில் மதன்குமார் ” டிக் டாக்” படத்தை தயாரித்து தனது குழுவினருடன் சேர்ந்து டைரக்ட் செய்துள்ளார்.” டிக் டாக்” படத்தின் “தூரிடாதே” பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.