“டைகர் படவரிசை எப்போதும் எனது திரை வாழ்க்கையை பிரகாசமாக்கும்!” என்கிறார் டைகர்-3-ன் மூலம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை வழங்கிய சல்மான் கான்
ஹிந்தி சினிமாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான சல்மான் கான், டைகர்-3-படத்தின் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்வதன் மூலம் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளார்! ஒய்ஆர்எஃப் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படம் உலகம் முழுவதும் 400 கோடி வசூல் செய்ததோடு நின்று விடாமல் ஹிந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி வெளியீட்டு வெற்றியை பதிவு செய்திருக்கிறது.
“மூன்று டைகர் படங்கள், மூன்று வெற்றிக் கதைகள். டைகர் படவரிசையின் 3 பாகங்களும் என் இதயத்தில் ஆழப் பதிந்து இருக்கிறது, மேலும் அது மக்களின் மனங்களிலும் அதற்கான இடத்தைப் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
டைகர் படவரிசையானது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்றாகும், மேலும் நிச்சயமாக இது ஒரு பாரம்பரிய பிராண்டாகும், இது எனது திரைவாழ்க்கையில் எப்போதும் வெளிச்சமாக பிரகாசித்துக் கொண்டே இருக்கும்” என்றார்.
சல்மான் கூறும்போது, “நான் ஏக்தா டைகர் படப்பிடிப்பில் இருந்தபோது, அடுத்த பாகம் எடுப்போம் என்று எனக்குத் தெரியாது, நம்ப முடியாத அளவிற்கு நாம் இப்போது அதன் மூன்றாம் பாகத்தை டைகர்-3-ன் மூலம் அடைந்துள்ளோம்! 2012 முதல் உலகளவில் அதன் பார்வையாளர்களை மகிழ்விக்கும் தனி படவரிசையாக உருவாகி உள்ளது.எந்தவொரு படத்திற்கோ அல்லது படவரிசைக்கான அதன் வெற்றிக்கான ஆதாரம் அது எழுதும் வெற்றிக் கதையில் உள்ளது” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “டைகர் படவரிசையானது அளவில்லா அன்பை பொழியும் அளவிற்கான உளவாளியை வழங்கியுள்ளது என்று நான் நினைக்கிறேன். நான் டைகர் திரைப்படத்தை சுவாசித்தேன் மற்றும் அதனுடன் வாழ்ந்தேன், எனக்கும் என் படங்களுக்கும் ரசிகர்கள் அளித்த அரவணைப்பிற்கும் பாராட்டுக்களுக்கும் அனைவருக்கும் நன்றி.