ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home செய்திகள் விளையாட்டு

தமிழ்நாடு தடகள சங்கம் 15-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

by Tamil2daynews
October 17, 2021
in விளையாட்டு
0
தமிழ்நாடு தடகள சங்கம் 15-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி
0
SHARES
42
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
தமிழ்நாடு தடகள சங்கம் 15-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டரங்கில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.  

விளையாட்டு வீரர்களின் குறைகளைப் போக்க விரைவில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்படும் என்றும், எந்த குறையாக இருந்தாலும் அரசுக்கு தெரியப்படுத்தினால் உடனுக்குடன் அது நிவர்த்தி செய்யப்படும் என்றும் சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு தடகள சங்கம் நடத்தும் 93-வது தமிழ்நாடு மூத்தோர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டரங்கில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.

15-ம் தேதி முதல் வரும் 17-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 2,000-க்கும் மேற்பட்ட இளைய, மூத்த தடகள வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்று தேர்வாகும் வீரர்கள், அடுத்ததாக தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் விளையாட உள்ளனர்.நிகழ்வை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மெய்யநாதன், தமிழ்நாட்டில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான நிலம் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை இனி தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு முன்னெடுத்துவருவதாகவும் கூறினார்.

விளையாட்டுத்துறையின் மீது முதலமைச்சர் தனி கவனம் செலுத்துவதற்கும், அவர் தொடர்ந்து இளமையாக இருப்பதற்கும் விளையாட்டின் மீது அவருக்குள்ள ஆர்வமே காரணம் என்றும் அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.

அடுத்த 6 மாத காலத்துக்குள் வெளிநாட்டு பயிற்சியாளர்களை தமிழ்நாடு அழைத்து வந்து, இங்குள்ள அனைத்து வகையான விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேசிய அமைச்சர் மெய்யநாதன், 15 நாட்களுக்குள் விளையாட்டு வீரர்களின் குறைகளை கேட்பதற்கான கட்டுப்பாட்டு மையம் திறக்கப்படும் என்றும் என்ன குறை இருந்தாலும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அது நிவர்த்தி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், விளையாட்டு வீரர்களுக்கு இலவச பயிற்சி வழங்கும் திட்டம், தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் முழு செலவையும் அரசே ஏற்பது உள்ளிட்ட திட்டங்களையும் அரசு விரைந்து செயல்படுத்த உள்ளதால், விளையாட்டு வீரர்கள் அனைவரும் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதை இலக்காக வைத்து உழைக்க வேண்டும் என்று அமைச்சர் மெய்யநாதன் கேட்டுக்கொண்டார்.

நிகழ்வில் எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமன், தமிழ்நாடு தடகள சங்க தலைவர் தேவாரம், செயலாளர் லதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

(( பேட்டி : மெய்யநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர் ))

Any details & Results regarding the event log onto https://tnathleticassociation.com/
Previous Post

உலக தரம் வாய்ந்த துணிக் கடையை சென்னை அண்ணா நகரில் துவக்கி வைத்த  அமைச்சர் சேகர்பாபு!

Next Post

புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த “அட்ரஸ்” படபிடிப்பு முடிவடைந்தது.

Next Post
புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த  “அட்ரஸ்” படபிடிப்பு முடிவடைந்தது.

புரட்சி வாலிபனாக.. நட்புக்காக முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வாமுரளி நடித்த “அட்ரஸ்” படபிடிப்பு முடிவடைந்தது.

Popular News

  • சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘அவ்வையாரும், அதியமானும் சேர்ந்து சரக்கு அடித்தார்கள்’ என்கிறார் நாஞ்சில் சம்பத்!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சர்வதேச அளவில் பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாகிவரும் கார்த்தியின் 25வது படம் ‘ஜப்பான்’

September 21, 2023

பான்-இந்தியா கதையம்சம் கொண்ட திரைப்படத்திற்காக செல்வராகவனுடன் இணையும் தெலுங்கு, மலையாள முன்னணி நட்சத்திரங்கள்

September 21, 2023

அல்லு அரவிந்த் பெருமையுடன் வழங்கும் #NC23 படத்தில் இணைந்தார் நடிகை சாய் பல்லவி

September 21, 2023

உலகளவில் 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்கும் ஷாருக்கானின் ‘ஜவான்’

September 21, 2023

மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்

September 21, 2023
சமுத்திரக்கனி நடிக்கும்   “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

சமுத்திரக்கனி நடிக்கும் “திரு.மாணிக்கம்” ஃபர்ஸ்ட் லுக் !!

September 22, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!