கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் இந்தியாவின் மிகப்பெரிய ஆக்சன் அதிரடியாக உருவாகி வரும் “மார்ட்டின்” திரைப்படம் 11 அக்டோபர் 2024 அன்று உலகமெங்கும் வெளியாகவுள்ளது.
வாசவி எண்டர்பிரைசஸ் மற்றும் உதய் K மேத்தா புரொடக்ஷன் நிறுவனங்களின் சார்பில், உதய் மேத்தா மற்றும் சூரஜ் உதய் மேத்தா ஆகியோர் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கன்னட திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் மிகப் பிரம்மாண்ட படைப்பாக ‘மார்ட்டின்’ படத்தைத் தயாரித்து வருகின்றனர்.
ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘மார்ட்டின்’ படத்தினை AP.அர்ஜுன் இயக்குகிறார். கதை, திரைக்கதை ஆக்ஷன் கிங் அர்ஜுன் சர்ஜா எழுதியுள்ளார். ஒளிப்பதிவாளர் சத்யா ஹெக்டே ஒளிப்பதிவு செய்கிறார். டோலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர் மணி ஷர்மா அற்புதமான பாடல்களுக்கு இசையமைத்துள்ளார், மேலும் கேஜிஎஃப் மற்றும் சலார் புகழ் ரவி பஸ்ரூர் பின்னணி இசையமைத்துள்ளார்.