சமுத்திரக்கனி வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய நந்தா பெரியசாமி..!
காதல் சார்ந்த படங்கள் எடுப்பதிலும், குடும்பங்கள் சார்ந்த படம் எடுப்பதிலும் கைதேர்ந்தவர் இயக்குனர்,நடிகர் நந்தா பெரியசாமி அவர்கள்.
அவரது படங்கள் அல்லாமல் மற்றவர்கள் கடுமையான உழைத்து ஜெயித்தால் அதை பாராட்ட நிச்சயம் தவறமாட்டார் இயக்குனர் நந்தா பெரியசாமி.
அப்படி ஒரு நிகழ்வு தான் இது.
இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்து வருகிறார்.இந்த படத்துக்கு ‘மைனா’ பட புகழ் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்நிலையில் சமுத்திரகனி இயக்கத்தில் பவன் கல்யாண் – சாய்தரம்தேஜ் நடிப்பில் உருவான “ப்ரோ” திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் நந்தா பெரியசாமி மற்றும் படக்குழுவினர் நடிகர் சமுத்திரகனிக்கு10ம் நாள் வெற்றியை கேக் வெட்டி கொண்டாடினர்