‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…
எத்தனையோ நடிகர்கள் நடித்த படங்கள் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தால் கோலாகலமாக இருக்கும் ஆனால் நடிகர் ரஜினிகாந்த் நடித்தால் அந்த படத்தின் விழா மிக கோலாகலமாக இருக்கும்.
அதற்குப் பெயர் தான் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் சுனில், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காவாலா, ஹுக்கும் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், காவாலா, ஹுக்கும் பாடல்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
வரும் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகவுள்ள ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை வெள்ளிக் கிழமை ஜூலை 28-ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
அதையோட்டி ரசிகர்களுக்கு சன் பிக்சர்ஸ் ஆன்லைன் பதிவு செய்து இலவச டிக்கெட்டுகளை வழங்கி வருவது ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.