திடீரென அந்தர் பல்டி அடித்த விஜயலட்சுமி
சீமானுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்ற நடிகை விஜயலட்சுமி, அவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு வளசரவாக்கம் காவல்நிலையத்திற்கு சென்ற நடிகை விஜயலட்சுமி, எழுத்துப்பூர்வமான கடிதத்தை அளித்து சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருடைய வற்புறுத்தலினாலும் இந்த வழக்கை வாபஸ் பெறவில்லை.
சீமானிடம் பேசினேன்.
நான் சீமானிடம் காசு வாங்கவில்லை.
சீமானின் குரல் தான் தமிழகத்தில் ஓங்கி ஒலிக்கிறது.
அது ஒலித்து கொண்டே இருக்கட்டும். சீமானை விசாரணைக்கு கொண்டு வர முடியவில்லை.
அவர் பவராக உள்ளார் என தெரிவித்தார்.
இவர் காசு வாங்கவில்லை என்று கூறினாலும் சில பல கோடிகள் இவர் வசம் வந்தது உண்மை என்று அங்கிருந்த சிலர் முணு முனுப்பதை நம் காதில் கேட்க முடிந்தது.
எது எப்படியோ இனி சமூக வலைத்தளங்கள் கொஞ்சம் கொந்தளிக்காமல் இனி அமைதி காக்கும்.