குடும்ப உறவுகளில் உள்ள மேன்மைகளையும் அழகியலையும் பற்றி எதார்த்தமாக பேசும் ‘ரங்கோலி
கோபுரம் ஸ்டுடியோஸ், G.சதீஷ்குமார் மற்றும் Kபாபு ரெட்டி தயாரிப்பில் சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை மற்றும் நடுத்தர குடும்ப வாழ்வியலை அழகியலோடு மையமாக கொண்டு வண்ணமயமான உணர்வுகளையும் கதாபாத்திரங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ரங்கோலி’. அறிமுக இயக்குனர் வாலி மோகன் தாஸ் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.


சென்னை சுற்றியுள்ள பகுதிகள் குறிப்பாக ராயபுரம், காசிமேடு, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் என பல பகுதிகளில் படிப்பிடிப்பை நடத்தியுள்ளனர். எட்டு தோட்டாக்கள், ஐரா, ஆகிய படங்களுக்கு இசையமைத்த சுந்தரமுர்த்தி K.S இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு I.மருதநாயகம், படத்தொகுப்பு R.சத்யநாராயணன் மற்றும் கலை இயக்கம் ஆனந்த்மணி செய்துள்ளனர்.
‘ரங்கோலி’ திரைப்படம் செப்டம்பர் 1 ம் தேதி வெளியாக இருக்கிறது