• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா !!

by Tamil2daynews
June 6, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘P T சார்’ திரைப்பட வெற்றி விழா !!

 

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி K கணேஷ் தயாரிப்பில், ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், கடந்த  மே 24ஆம் தேதி, கலக்கலான கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினராக வெளியான திரைப்படம் ‘P T சார்’.  ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் பாராட்டினில் பெரும் வரவேற்பைக் குவித்த இப்படம், திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில்,  படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.

இந்நிகழ்வினில்…

ஆர்ட் டைரக்டர் அமரன் பேசியதாவது…
இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு என் முதல் நன்றி. அவர் சொன்ன கதை எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார். இந்த படத்தை தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி. ஆண் எனும் கர்வம் அழியவேண்டும் என நினைப்பவன் நான், நம்மைச் சுற்றி நடக்கும் விசயங்களைக் கவனிக்கையில் நான் ஆணாக இருப்பதை நினைத்து வெட்கப்படுகிறேன். நாம் வாழும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் படம் தான் இது. இப்படத்தைப் பாராட்டி வரவேற்ற அனைவருக்கும் நன்றி
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம்  பேசியதாவது..
இந்தப்படத்தை எல்லோரிடமும் சேர்த்த பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணமாக இருந்த ஹிப்ஹாப் ஆதி, இயக்குநருக்கு நன்றி. இந்த படத்தைத் தயாரித்த டாக்டர் ஐசரி K கணேஷ் அவர்களுக்கு நன்றி. என்னுடன் உழைத்த சக கலைஞர்களுக்கு நன்றி.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியதாவது…
ஆதி பிரதருக்கு நன்றி. நான் யோசித்ததை ஏற்று, அதைக் கதையாகக் கொண்டு சேர்த்தது அவர் தான். அதே போல் நான் கேட்டதையெல்லாம் தந்து, இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு சேர்த்த ஐசரி சாருக்கு பெரிய நன்றி. மேலும் இப்படத்தில் உழைத்த என் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இளவரசு சார் இப்படத்தில் தந்த நடிப்பு, படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தது, அவருக்கு என் நன்றி.  முனீஷ்காந்த் மிக அட்டகாசமான நடிப்பைத் தந்தார். இரண்டாம் பாதி கோர்ட் டிராமாவாக ஆகிவிடக்கூடாது என்பதால் ஜட்ஜாக பாக்யராஜ் அவர்களை  அணுகினேன், அவர் வந்த பிறகு இந்தப்படம் இன்னும் சிறப்பாக அமைந்தது. இந்தக்கதை யோசித்த போது ஹராஸ்மெண்ட் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள் ஆனால் அதன் பிறகு பெண்கள் படும் கஷ்டத்தைச் சொல்லலாம் என நினைத்தேன். நிறையப்பேர் படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது இப்படம் நல்ல தெளிவைத் தந்துள்ளது என்று கூறுகிறார்கள் மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் முனீஷ் காந்த் பேசியதாவது…
தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோவுக்கு நன்றி.  படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி. என் கதாபாத்திரத்தைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.

நடிகர் இளவரசு பேசியதாவது…
இயக்குநர் வேணுகோபாலுக்கு நான் தான் நன்றி சொல்ல வேண்டும். பல படங்களில் நடிக்கக் கேட்கும்போது  நாமும் வீட்டு பில் கட்ட வேண்டுமென்பதால் தான் போக வேண்டும். ஒரு சில இயக்குநர்கள் நமக்கு சிறப்பான கதாப்பத்திரத்தை தருவார்கள். அப்படி கார்த்திக் எனக்கு நல்ல கதாபாத்திரத்தைத் தந்துள்ளார். இந்த மாதிரி அப்பா மகளை மையப்படுத்திய கதையை, இன்றைய காலத்தில் சொல்ல ஒரு ஹீரோ தேவைப்படுகிறது. சினிமாவைத் தாண்டிய இமேஜ் உள்ள ஹிப்ஹாப் ஆதி இப்படத்தைச் செய்ததற்கு நான்  நன்றி சொல்லிக்கொள்கிறேன். தனக்கு ஒரு வியாபாரம் இருக்கும் சூழ்நிலையில் இம்மாதிரி கதையை தேர்ந்தெடுத்த அவருக்கு நன்றி. சினிமாவில் சில நேரம் நல்ல விதைகள் விழும். அந்த வகையில் கார்த்தி மிகச்சிறப்பான இயக்குநர். காலேஜ் சேர்மனை வில்லனாகக் காட்டும் கதை என நினைக்காமல், கல்லூரி நடத்தும் ஐசரி கணேஷ் சார்  இப்படத்தைத் தயாரித்ததற்கு என் நன்றி. எந்நாளும் எனக்கு வாத்தியாராக இருக்கும் பாக்யராஜ் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரத்தை விமர்சனத்தில் பாராட்டிய அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பாக்யராஜ் பேசியதாவது…
ஹீரோ ஹிப்ஹாப் ஆதிக்கு என் முதல் நன்றி, அவர் நடிக்க நல்ல கதை  தேர்ந்தெடுக்க வேண்டுமென்று நினைக்காமல், நல்ல கதையைத் தயாரிப்பாளரிடம் எடுத்துச் சென்று, அந்த இயக்குநருக்கு வாழ்வை ஏற்படுத்தித் தந்ததற்கு நன்றி. ஐசரி இந்தக்கதையைத் தேர்ந்தெடுத்துத் தயாரித்ததற்கு நன்றி. கார்த்திக் வேணுகோபால் நான் பிறந்த ஊரிலிருந்து வந்திருக்கிறார் என்பது மகிழ்ச்சி. நல்ல கதையைச் சிறப்பான திரைக்கதையில் தந்துள்ளார் வாழ்த்துக்கள். படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ்
‘P T சார்’ படத்தின் மூன்றாவது நிகழ்ச்சி இது. படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி ‘P T சார்’  நன்றாகப் போகிறது. அதிலும் பலர் ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார்கள் அது பெரிய மகிழ்ச்சி. வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. அவர் சிறந்த இயக்குநராக வருவார். அவரது அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள், நல்ல படமெடுங்கள். ஹிப்ஹாப் ஆதி தான் இந்தப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படத்தைப் பாராட்டிய உங்களுக்கு என் நன்றிகள்
நடிகர் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியதாவது…
ஒவ்வொரு பத்திரிக்கை நண்பர்களுக்கும் எங்கள் படத்தைச் சரியாகக் கொண்டு சேர்த்ததற்காக என் நன்றி. இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன். இந்தப்படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷீட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார்,  பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷிணி மேடம், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது அனைவருக்கும் நன்றி.

இந்த படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்கியராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், திவ்யதர்ஷிணி, உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து  நடித்துள்ளனர்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்க, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி K கணேஷ் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார். ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இந்தப் கடந்த  மே 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

Previous Post

பாயல் கபாடியாவின் ஆல் வி இமேஜின் அஸ் லைட் திரைப்படம், வரலாற்றில் முதல் முறையாக ஒரு இந்திய திரைப்படமாக, கேன்ஸில் கிராண்ட் பிரிக்ஸ் விருதை வென்றுள்ளது.

Next Post

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

Next Post

மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

Popular News

  • கதை மீது நம்பிக்கை வைத்த ஷரவானந்த்..!

    0 shares
    Share 0 Tweet 0
  • எருமை சாணி ஹரிஜாவை ஞாயபகம் இருக்கா? தொடையழகி ரம்பா ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • அகண்டா 2: தாண்டவம் படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியானது !

    0 shares
    Share 0 Tweet 0
  • மாரீசன் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ’மகாராஜா’ திரைப்படம் நேற்று துபாய், புர்ஜ் கலிஃபாவில் கொண்டாடப்பட்டது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் ‘பெத்தி’ படத்தின், மிக முக்கியமான சண்டைக் காட்சி, பிரம்மாண்ட செட்டில், பாலிவுட்டின் பிரபல ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் படமாகிறது !!

November 30, 2025

‘சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !

November 30, 2025

பிளாக்பஸ்டர் படமான ‘நெலும் குலுனா’ (டென்டிகோ) / ‘பெருசு’ படத்தின் இயக்குநர் இளங்கோ ராம், எஸ்டோனியாவில் நடைபெறும் ‘ஏ’ லிஸ்ட் திரைப்பட விழாவின் நடுவராக நியமிக்கப்பட்டுள்ளார்!

November 30, 2025

‘ப்ராமிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் : இயக்குநர் சேரன் மற்றும் நட்டி வெளியிட்டனர்!

November 30, 2025

IPL – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

November 30, 2025

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!

November 29, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.