முருகதாஸ் இயக்கி ரஜினி நடித்துள்ள படம் தர்பார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் விவேக் கலந்துக் கொண்டு பேசியதாவது…
இந்த மேடைக்கு வந்த உடனே ரஜினி ஸ்டைல் வந்துட்டு.
நான் 3 எழுத்து சொல்றேன். அதை கேட்டால் இந்த அரங்கமே 10 நிமிடம் அதிரும். ஏனா இங்க இருப்பது ரஜினி ரசிர்கர்கள் இல்ல. ரஜினி வெறியர்கள்.
ரஜினி உடல்நிலை சரியில்லாதபோது அவர் மீண்டு வர கடவுளிடம் எல்லாரும் செய்த பிரார்த்தனைகள் தான் காரணம்.
ரஜினி சார் சிவனிடம் சிட்டிங்கும் போடுவார். எமனிடம் கட்டிங்கும் போடுவார். அதான் எமனிடம் கட்டிங் போட்டுவிட்டு வந்திருக்கிறார்.
இதை முருகதாஸ் முடிந்தால் தர்பாரில் பன்ச் டயலாக்காக வைக்க வேண்டும்” என பேசினார் விவேக்.