
“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.


நிகழ்வில் நடிகை அதுல்யா ரவி, “உலகில் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவிசெய்து வந்தால், ஆதரவற்றோர் என்று யாரும் இருக்கமாட்டார்கள். எனவே நம்மால் முடிந்த உதவியை இயலாதவர்களுக்கு செய்து அவர்களின் வாழ்க்கை முன்னேற்றதிற்கு பாதை வகுக்க வேண்டும்” என்றார்.

“உதவும் உள்ளங்கள்” அமைப்பின் நிறுவனர் சங்கர் மகாதேவன், “22 ஆண்டுகளாக ஆனந்த தீபாவளி நிகழ்வு நடைபெற்று வருகிறது. தெய்வகுழந்தைகளை மகிழ்வூட்டி அவர்களின் ஒட்டுமொத்த சந்தோஷ்த்தை வெளிக்கொணர்வது மட்டுமல்லாமல் இதுபோன்ற பிள்ளைகளின் எதிர்கால நல்வாழ்விற்கு கல்வி ஒளி வழங்குவதே இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம்” என்றார்.
