“பிலிப் கேப்பிடல்” 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022
ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் மற்றும் உலக மாஸ்டர்ஸ் தடகள சம்மேளனத்துடன் இணைந்து, இந்திய மாஸ்டர்ஸ் தடகள கூட்டமைப்பு, 42வது தேசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2022 ஐ ஏற்பாடு செய்துள்ளது. இந்திய மாஸ்டர்ஸ் தடகள போட்டிகளில் வெல்பவர்கள் ஆசிய மற்றும் உலக மாஸ்டர் தடகள சாம்பியன்ஷிப் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள்.
இந்திய முதுநிலை தடகள சம்மேளனம் (MAFI) தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன், 42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப்பை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் ஆதரவுடன் நடத்துவது, மிகவும் பெருமையான தருணமாகும் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயின் தாக்கங்களை கடந்து, நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குதல், நோய் தொற்றிலிருந்து மீள்தன்மை பெற்று, விளையாட்டு உலகமும் முதுநிலை தடகள இயக்கமும் தொடர்ந்து செயல்படுவதையும் உறுதிசெய்து, மீண்டும் போட்டிகள் திறப்பதற்கும், நம்மை மீட்டெடுப்பதற்கும், பின்னடைவிலிருந்து முன்னோக்கி செல்ல, நம் அனைவருக்குமான எதிர்காலத்தை உறுதி செய்வது இதன் சிறப்பான அம்சமாகும்.
திரு. D.டேவிட் பிரேம்நாத், இந்திய முதுநிலை தடகள சம்மேளனத்தின் பொதுச்செயலாளர், 42வது தேசிய முதுநிலை தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளின் தலைவராக இருப்பார், இந்த விளையாட்டு போட்டிகளின் மூலம் வீரர்களை தொழில்முறை மயமாக்குதல் மற்றும் வீரர்களை ஊக்குவித்து, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களை சர்வதேச தரத்திற்கு உயர்த்துவதும் மற்றும் நாட்டிற்கும் மாஸ்டர்ஸ் விளையாட்டு இயக்கத்திற்கும் மரியாதை பெற்று தருவதையும் குறிக்கோளாக கொண்டு செய்லபடவுள்ளனர்.