கேரள மாநிலத்தை சேர்ந்த அமலா பால், ‘வீரசேகரன்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ‘சிந்து சமவெளி’ என்ற சர்ச்சை படத்தில் நடித்து பிரபலமானார். பிறகு பிரபு சாலமனின் ‘மைனா’ மூலம் வளர்ந்து வரும் நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர், விக்ரம், விஜய் என்று முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி ஹீரோயின்களில் ஒருவர் ஆனார்.

இதற்கிடையே, இயக்குநர் விஜயிடம் காதல் வயப்பட்ட அமலா பால், கடந்த 2014 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிக்க விரும்பியதால் அமலா பாலுக்கும், இயக்குநர் விஜய்க்கும் இடையே மோதல் ஏற்பட்டு, திருமணமான ஒரு ஆண்டுகளிலேயே இருவரும் பிரிந்தார்கள். பிறகு முறைப்படி நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றுவிட்டார்கள்.

விவாகரத்துக்குப் பிறகு நடிப்பதில் கவனம் செலுத்திய அமலா பால், தெலுங்கு, மலையாளம், இந்தி என்று பல மொழிகளில் நடித்து வந்தார். அதேபோல், இயக்குநர் விஜய் இரண்டாவது திருமணம் செய்துக் கொண்ட நிலையில், தானும் ஒருவரை காதலிப்பதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் அமலா பால் தெரிவித்தார்.

அமலா பால் காதலிப்பவர் பாடகர் பவீந்தர், என்று தகவல் வெளியானது. மேலும், பவீந்தருடன் அமலா பால் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் வெளியானது.

இந்த நிலையில், அமலா பாலுக்கும், பாடகர் பவீந்தருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி அமலா பாலின் 2 வது திருமணம் நடைபெற்றது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.


தற்போது, அமலா பால் – பவீந்தர் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு