ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ரசிகர்களை கவர்ந்த “டான்” பட பாடல்கள்..!

by Tamil2daynews
May 3, 2022
in சினிமா செய்திகள்
0
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ரசிகர்களை கவர்ந்த “டான்” பட பாடல்கள்..!

பல ஆண்டுகளாக, ஒரு படத்தின் வெற்றிக்கு பங்களிப்பு செய்வதில் பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன  என்பது  திரைத்துறையில் நிரூபிக்கப்பட்ட உண்மை. ஒரு ஆல்பம் வெற்றி பெற்றால், அது படத்தின் 50% வெற்றிக்கு முன்னதாகவே உத்தரவாதம் அளித்து விடுகிறது, ஏனெனில் அது படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய கட்டத்தில் அனைவரின் கவனத்தை ஈர்க்கிற அம்சமாகும். மேலும், அனிருத் ரவிச்சந்தர் போன்ற இளைஞர்களின் அடையாளமாக விளங்கும் இசையமைப்பாளரின்  உணர்வு பூர்வமான இசையில், ஆல்பம் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்பது உறுதி. சிவகார்த்திகேயனுடனான அவரது முந்தைய ஆல்பங்கள் திரையுலகில் மறுக்கமுடியாத சார்ட்பஸ்டர்களாக பாராட்டப்பட்ட நிலையில், இருவரின்  கூட்டணியில் வரவிருக்கும் திரைப்படமான ‘டான்’ ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை குவித்துள்ளது.  முதல் சிங்கிள் பாடலான ‘ஜலபுலஜங்கு’, கல்லூரி மாணவர்களிடம்  திருவிழா கொண்டாட்டமாக மாறியது, அதைத் தொடர்ந்து ‘பே’ மற்றும் சமீபத்திய பாடலான – ‘பிரைவேட் பார்ட்டி’, ரசிகர்களை லூப்பில் கேட்க வைத்தன. ஒரு முழுமையான படைப்பாக, இந்த சீசனுக்கான திரைப்பட ஆர்வலர்களின் பட்டியலில் முதலிடத்தைப் பதிவுசெய்துள்ள ‘டான்’ படம் அடுத்தடுத்த பாடல்களின் ஹிட்டால் எதிர்பார்ப்பை இன்னும் உயர்த்தியுள்ளது. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த திரைப்படம் மே 13, 2022 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், திரைப்பட ஆர்வலர்கள், குறிப்பாக பொழுதுபோக்கை விரும்பும் திரைப்பட ரசிகர்கள் திரைப்படத்தை முன்கூட்டியே முன்பதிவு செய்வது குறித்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Here's the release date of Sivakarthikeyan's DON - StudioFlicks
Lyca Productions ஏற்கனவே அதன் முந்தைய வெளியீட்டான ‘RRR’ மூலம், மிகப்பெரிய வெற்றியை ருசித்துள்ளது, இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூலை குவித்தது. பார்வையாளர்களை திரையரங்குகளுக்குள் ஈர்ப்பதற்கு திரைப்படத்தின் சரியான வெளியீட்டு தேதியை கண்டுபிடிப்பதில் தயாரிப்பு நிறுவனம் மிகவும் ஆர்வமாக இருந்தது. ஏற்கனவே கோடை விடுமுறைகள் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கும் நிலையில், ‘டான்’ படம் குடும்ப பார்வையாளர்களை தியேட்டருக்கு இழுத்து வரும் என்பது உறுதியான ஒன்று. கேளிக்கை, இசை, பொழுதுபோக்கு, மேலும் பல கவர்ச்சிகளுடன் கூடிய ‘டான்’ திரைப்படம் ஒரு முழுமையான பொழுதுபோக்காக இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவகார்த்திகேயன் ஏற்கனவே தனது முந்தைய படங்களின் பாக்ஸ் ஆபிஸில் ஒரு அற்புதமான வசூலை நிரூபித்திருப்பதால், இந்த படத்திற்கு ஒரு பிரம்மாண்டமான வரவேற்பு இருக்கும் என  தயாரிப்பு நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.
DON sets release date in February? Tamil Movie, Music Reviews and News
சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, ‘டான்’ படத்தின் வெளியீட்டை மார்ச் 25, 2022லிருந்து, மே 13, 2022க்கு மாற்ற மனப்பூர்வமாக முடிவெடுத்த தயாரிப்பாளர்-நடிகர் சிவகார்த்திகேயனுக்கு Lyca Productions நன்றியை தெரிவிக்கிறது. இந்த திரைப்படம் உலகளாவிய மக்களுக்கான முழுக்க முழுக்க பொழுதுபோக்கு சார்ந்த  வேடிக்கையான, கோடை விருந்தாக இருக்கும்.
Sivakarthikeyan's Don to release in theatres, makers announce date | The News Minute
சிவகார்த்திகேயன் பிரியங்கா அருள் மோகன் எஸ்.ஜே.சூர்யா முதன்மை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், R.J.விஜய், சிவவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல முன்னணி நடிகர்கள்  இணைந்து நடித்துள்ளனர்.
Don (2022) - IMDb
தொழில்நுட்ப குழுவில் அனிருத் (இசை), KM.பாஸ்கரன் (ஒளிப்பதிவு), நாகூரன் ராமச்சந்திரன் (எடிட்டர்), உதயகுமார் K (கலை), விக்கி (ஸ்டண்ட்ஸ்), சுரேன் G-S அழகியகூத்தன் (ஒலி வடிவமைப்பு-ஒலி கலவை), விக்னேஷ் சிவன்-ரோகேஷ் (பாடல்கள்), பிருந்தா -ஷோபி பால் ராஜ்-பாப்பி-சாண்டி (நடன அமைப்பு), அனு-ஹரிகேஷ்-நித்யா-ஜெஃபர்சன் (ஆடை வடிவமைப்பு), பெருமாள் செல்வம் (காஸ்ட்யூமர்), P கணபதி (மேக்கப்) ஸ்டில்ஸ் பிருதிவிராஜன் N (ஸ்டில்ஸ்), M.மஞ்சுநாதன் (தயாரிப்பு மேலாளர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), டூனி ஜான் (போஸ்டர் டிசைனர்), வீர சங்கர் (தயாரிப்பு நிர்வாகி), திவாகர் J – AR கார்த்திக்-ராகுல் பரசுராம் (SK Productions), GKM  தமிழ்குமரன் (Head, Lyca Productions), கலை அரசு ( இணை தயாரிப்பாளர்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
சிபி சக்கரவர்த்தி இயக்குநராக தனது திரைப்பயணத்தை துவங்கும் “டான்” திரைப்படத்தினை Lyca Group தலைவர் சுபாஸ்கரன் Lyca Productions சார்பில்,  Sivakarthikeyan Productions  உடன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்.
Previous Post

“தாதா சாகேப் பால்கே” விருது பெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம்.

Next Post

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் ‘தடை உடை’.

Next Post
‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு!

பூஜையுடன் தொடங்கிய நடிகர் சிம்ஹாவின் புதிய படம் 'தடை உடை'.

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்ட ‘தலைக்கவசமும் 4 நண்பர்களும்’ டீஸர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023

முகேன் ராவ், தேஜு அஷ்வினி நடிப்பில், மகேஷ் ராம் கே இயக்கத்தில், எஸ் ஜி சி மீடியா தயாரிப்பில், தரண் குமார் இசையில் கலகலப்பான பிரேக் அப் ஆல்பம் ‘சிங்கிள் ஆயிட்டேன் டி’

March 21, 2023

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

March 21, 2023

‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

March 21, 2023

அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

March 21, 2023
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி  இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நற்பணி இயக்கம் சார்பில் தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் தென்மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி.

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!