
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருக்கு பிறகு அதிக அளவு பொருட்செலவில் படம் எடுக்கும் வல்லமை பெற்றவர் ஷங்கரின் சிஷ்யன் அட்லீ தான். இதுவரை அட்லீ எடுத்த நான்கு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றி.
தளபதி விஜய்யை மட்டும் மூன்று முறை இயக்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் அவர் இயக்கிய 3 படங்களும் விஜய்க்கு வசூல் ரீதியாக பெரிய வெற்றியைக் கொடுத்த திரைப்படங்கள்.

ஆனால் அட்லியின் மீது எப்போதுமே தயாரிப்பு தரப்பு கொஞ்சம் அப்செட்டில் உள்ளது. என்னதான் பெரிய நடிகர்களை வைத்து படம் இயக்கினாலும் முறையான திட்டம் இல்லாமல் படம் எடுப்பதால் தயாரிப்பாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை கொடுத்துள்ளார்.
இதனால் அட்லீ வைத்து படம் எடுக்கவே பல தயாரிப்பாளர்கள் யோசித்து வருகின்றனர். இந்நிலையில்தான் அட்லீக்கு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. அதற்கான கதை வேலைகளில் ஈடுபட்டிருந்தார் அட்லீ.

ஷாருக்கான் தரப்பு அட்லீயை பற்றி பலமுறை தமிழ் சினிமாவில் விசாரித்துவிட்டு தான் இந்த முடிவை எடுத்துள்ளனர். இருந்தாலும் இங்கு செய்வதைப்போல் இஷ்டத்திற்கு செலவு செய்ய பாலிவுட்காரர்கள் விட மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சாருக்கான் தரப்பு அட்லீக்கு பல கண்டிஷன்கள் போட்டுத்தான் இந்த பட வாய்ப்பைக் கொடுத்துள்ளனர் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இதில் மிகவும் சந்தோசமாக இருப்பது தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள் தான்.
விஜய்யை வைத்து படம் எடுக்க தயாரிப்பாளர்கள் ஆர்வமாக இருந்தாலும் விஜய்-அட்லீயை கை காண்பித்து விட்டால் தயாரிப்பாளர்கள் வேறு வழியின்றி ஒப்பந்தம் செய்ய வேண்டிய நிலைமை இருந்தது.

தற்போது அந்த நிலைமை இல்லாததால் மிகவும் குஷியாக உள்ளார்களாம் தயாரிப்பாளர்கள். கொரோனா வைரஸ் விட கொடூரமான ஆளா இருப்பாரு போல அட்லீ.