பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று முதல் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.அதில் போட்டியாளர்களுக்கு ஒரு டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. ஆமா என்றால் குடி இல்லை என்றால் கடி என தெரிவித்துள்ளனர் அதில் வனிதாவிடம் ஒரு கேள்வி வருகிறது. அதில் இல்லை என சொல்லி அப்பளத்தை வனிதா கடித்து விட்டு இது பற்றி எல்லாருக்கும் பதில் தெரியும் என சொல்கிறார்.
ஆனால் அதற்கு மற்ற போட்டியாளர்கள் யாருக்கும் இதில் பதில் தெரியாது என சொல்ல, உடனே கோவித்துக் கொண்ட வனிதா நான் யார் என்பது மக்களுக்கு தெரியும் உங்களுக்கு சொல்ல தேவை இல்லை என சொல்கிறார். மேலும் வனிதா கோவப்பட்டு, இந்த டாஸ்கில் இருந்து வெளியேறுவதாக கூறுகிறார்.