விதார்த்-தன்யா பாலகிருஷ்ணன்,மாரிமுத்து முக்கிய கதாபாத்திரங்ககளில் நடித்துள்ள படம் ‘ கார்பன் ‘. விதார்த் நடிப்பில் வெளிவந்திருக்கும் இருபத்து ஐந்தாவது படம் இது. விஜய் ஆண்டனி நடித்து இருந்த அண்ணாதுரை ‘ படத்தை இயக்கி இருந்த ஆர். சீனிவாசன், இப்படத்தை இயக்கியிருக்கிறார்.படம் ஆரம்பத்தில் “மாநாடு” “ஜாங்கோ” படம் போல இருக்குமோ என்று நாம் நினைத்தால் அது மிகமிகத் தவறு என்று படத்தின் இறுதிக் காட்சி வரை இயக்குனர் அப்படியே உல்டாவாக மாற்றி நம்மை சீட்டின் நுனிக்கு கொண்டு வருகிறார்.முதலில் இயக்குனருக்கு ஒரு வாழ்த்துக்கள். இதுவும் ஒரு வகை டைம் லூப் டைப் கதைதான். ஆனால், ‘ மாநாடு ‘, ‘ ஜாங்கோ ‘படங்களிலிருந்துவித்தியாசப்பட்டிருக்கிறது. விதார்த்தின் கனவில் காணும் நிகழ்வுகள் எல்லாமே நிஜத்திலும் நடக்கிறது. சென்னை கார்ப்பரேஷன் குப்பை லாரி ஓட்டும் டிரைவராக அப்பா கேரக்டரில் மாரிமுத்து மிக இயல்பாக நடித்திருக்கிறார்.போலீஸ் வேலைக்கு தான் போக வேண்டும் என்கிற குறிக்கோளினால் வேறு வேலைக்கு போகாததால், அம்மா இல்லாத பையன் விதார்த் மீது அப்பாவுக்கு கடும் அதிருப்தி.அவர் தொல்லை தாங்காமல் வேறு வேலைக்கு போக முடிவெடுக்கிறார் விதார்த்.முதல் மாத சம்பளம் வாங்கிக்கொண்டு தான் உன்கிட்ட பேசுவேன் என்று அப்பாவிடம் சபதம் போட்டிருக்கிறார். அது வரை வீட்டில் அருகருகில் இருந்தாலும் வாட்ஸ் அப்பில் தான் வாய்ஸ் மெசேஜில் பேசிக்கொள்வார்கள். அதெல்லாம் நல்ல வித்தியாசமான காட்சிகள்.ஒரு பிரைவேட் கம்பெனியில் அசிஸ்டன்ட் மேனேஜராக ரூபாய் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்கு சேருகிறார் விதார்த். முதல் மாத சம்பளம் வாங்கி அப்பாவிடம் பேச நினைக்கிறார். அதேசமயம் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அதில் கிடைக்கும் பணத்தில் பையனுக்கு போலீஸ் வேலை வாங்கித் தரலாம் என்கிற எண்ணத்தோடு மாரிமுத்து.ஆனால் நினைத்தது போல இல்லாமல் விடியற்காலை நேரத்தில் மாரிமுத்து ஒரு காரினால் தூக்கி வீசப்பட்டு ஆக்சிடென்ட் ஆகி ஹாஸ்பிடலில் அவரை சேர்க்கிறார்கள். இதையெல்லாம் கனவிலும் கண்டு நிஜமாகவும் நடப்பதால் கனவில் வந்த கருப்பு நிற காரையும், கொலை செய்ய முயற்சி செய்தவரையும் தேட ஆரம்பிக்கிறார் விதார்த். ஒருபுறம் மருத்துவமனையில் உயிருக்கு போராடும் அப்பா மாரிமுத்து.
அதன் பிறகு நடக்கும் எதிர்பாராத சம்பவங்கள் திரைக்கதையில் திருப்புமுனை. கதாநாயகி தன்யா பாலகிருஷ்ணனின் கேரக்டர் சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும்அப்பா கேரக்டரில் மாரிமுத்து நெகழ்ச்சி ஏற்படுத்துகிறார். பையன் மீது அளவற்ற அன்பு.. அதேசமயம் போலியான கண்டிப்பு… நன்றாகவே நடித்திருக்கிறார்.மைனா படத்துக்குப் பிறகு விதார்த்தை முழுமையாக பயன்படுத்தி இருப்பது ‘ கார்பன் ‘ படத்தில்தான். அவரும் சிறப்பாகவே நடித்திருக்கிறார்.இப்போது உள்ள ‘ ஜெராக்ஸ் ‘ எல்லாம் வராத காலத்தில் ஒரு பேப்பருக்கும் இன்னொரு பேப்பருக்கும் இடையே கார்பன் ஷீட் வைத்து எழுதுவார்கள். முன்பக்கத்தில் எழுதியதின் அச்சு அசல் காப்பி அந்த பேப்பரில் கிடைக்கும். அது போல, தான் தான் காணும் கனவுகள் எல்லாம் நிஜமாகவும் நடந்து, அந்தக் கனவினாலேயே கொலையாளியை கண்டுபிடிக்கப்படுவது எல்லாம் நடப்பது ஏதோ அதிசயமாக இல்லாமல், அதற்குண்டான காட்சிகளை தெளிவாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஆர். சீனுவாசன்.
செக்யூரிட்டியாக வரும் பிச்சைக்காரன் மூர்த்தி இளநீர் வெட்டுபவர் கண்தெரியாத சிறுமி இவர்களையெல்லாம் பயன்படுத்தி ஒரு சண்டைக் காட்சி அமைத்திருப்பது வித்தியாசமானதுமொத்தத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து நெஞ்சில் ஒட்டாத ‘அண்ணாதுரை’ படத்தை தந்த இயக்குனரின் ‘கார்பன்’ படம் இறுதியில் நம் மனதில் ஒட்டிக் கொள்கிறது என்பது உண்மை.இந்த 2022ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே தமிழ் சினிமாவிற்க்கு நல்ல ஆரோக்கியமான எதிர்காலம் உள்ளது என்பதற்கு சான்று இந்த ‘கார்பன்’ திரைப்படம்.