ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“சினம்” திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

by Tamil2daynews
September 5, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“சினம்”  திரைப்பட இசை வெளியீட்டு விழா !!!

 

Movie Slides Pvt. Ltd  சார்பில் R. விஜயகுமார் தயாரிப்பில்,  இயக்குநர் GNR குமரவேலன் இயக்கத்தில்,  அருண் விஜய், பாலக் லால்வானி,  நடித்துள்ள திரில்லர் டிராமா திரைப்படம் “சினம்”. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை விழா இன்று கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலஙகளும் படத்தின் குழுவினரும் கலந்துகொண்டனர்.

இவ்விழாவினில்..,
இயக்குனர் ஹரி கூறியதாவது..,
“படத்தின் டிரைலரை நான் பார்த்தேன், கவரும் வகையில் இருந்தது.  படத்தின் கதைகரு ஆழமாகவும், உணர்வுபூர்வமாகவும் இருக்கிறது. மனதை உலுக்ககூடிய ஒரு படமாக இருக்கும் என தெரிகிறது. பல ஆண்டுகள் கழித்து விஜயகுமார் சார் தயாரிப்பாளராக மாறியுள்ளார். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும்,இந்த படம் அனைவருக்கும் லாபம் தரக்கூடிய ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குனர் அறிவழகன் கூறியதாவது..,
“அருண் விஜய் உடைய அர்பணிப்பு அபாரமானது, அவர் எல்லாவற்றில் முழு கவனத்துடன் செயல்படகூடிய நபர். இந்த படத்திலும் முழு உழைப்பை தந்துள்ளார். விஜயகுமார் சார்  உடன் சேர்ந்து இந்த படத்தை அவர் தயாரித்துள்ளார் அதற்கு எனது வாழ்த்துகள். இயக்குனர் குமரவேலன் திறமையான நபர், அவருடைய முந்தைய படங்கள் அவருடைய ஆழமான கதையமைப்பை வெளிகாட்டியது. ஒளிப்பதிவாளர் கோபிநாத் உடைய விஷுவலை பார்க்க நான் காத்திருக்கிறேன். இந்த படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும், அதற்கு எனது வாழ்த்துகள்.

நடிகர் சாந்தனு கூறியதாவது..,
“அருண் விஜய் உடைய பயணம் என்னை எப்போதும் ஊக்கப்படுத்துகிற  ஒன்று. தன்னுடைய திறமையையும், அதையும் தாண்டி  கடின உழைப்பை கொடுத்து தனக்கென தனிப்பாதையை உருவாக்கியுள்ளார். அது திரைத்துறையில் எளிதானதல்ல. விஜயகுமார் சார் தன்னுடைய மகனுக்காக பெரிய அர்ப்பணிப்பை கொடுத்துள்ளார். அவருக்கு தொடர்ந்து வெற்றிகள் குவிய வேண்டும். படத்தின் டிரைலர் சிறப்பாக இருக்கிறது. படக்குழு அனைவருக்கும் எனது வாழ்த்துகள், இந்த படம் செப்டம்பர் 16 வெளியாக இருக்கிறது, இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு  தாருங்கள் நன்றி.
நடிகர் விஜய் ஆண்டனி கூறியதாவது..,
“நடிகர் அருண் விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சிறந்த நடிகருடைய நடிப்பை நேரில் பார்த்த சந்தோசம் எனக்கு கிடைத்தது. அவர் இன்னும் நிறைய உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு நிறைய திறமைகள் இருக்கிறது, அவருடைய பாடும் திறமையை பாராட்டி ஆக வேண்டும். இவ்வளவு நன்றாக பாடுவார் என எனக்கு தெரியாது. இயக்குனர் குமரவேலன் திறமையான இயக்குனர், அவருடன் மூன்று படங்கள் பணியாற்றியுள்ளேன். அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட, அவர் இந்த படத்தில் சிறப்பான  பணியை கொடுத்துள்ளார்.  இந்த படம் செப்டம்பர் 16  வெளியாகவுள்ளது, அனைவரும் படம் பாருங்கள் நன்றி.

மகிழ் திருமேனி கூறியதாவது..,
“அருண் விஜய் இப்பொழுது பெரிய வெற்றியை அடைந்து இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தரக்கூடியது. அவர் மிகச்சிறந்த நடிகர் என்பது அவருடைய அனைத்து வகையான உணர்வுகளை வெளிப்படுத்தும் நடிப்பில் தெளிவாக தெரிகிறது. விஜயகுமார் சார் மிகவும் திறமை வாய்ந்த அதே நேரத்தில், மனிதநேயம் மிக்க ஒரு நபர். இயக்குனர் குமரவேலனுடைய அனைத்து படத்தையும் ரசிகர் போல் பார்ப்பவன் நான். இந்த படம் பெரிய வெற்றியடைய எனது வாழ்த்துகள்.”

நடிகர் பிரசன்னா கூறியதாவது..,
“பல புறக்கணிப்புகளுக்கு அப்புறம் அருண் விஜய் எழுந்து வந்து இருக்கிறார். அவருக்கு ஏற்ற வார்த்தை தான் படத்தின் தலைப்பாக அமைந்து இருக்கிறது. எங்களுக்கு உதாரணமாக இருக்கிறார். அவர் எனது குடும்ப நண்பர். இயக்குனர் குமார் உடைய திறமை எல்லாரையும் ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. காளி வெங்கட் சிறந்த குணசித்திர நடிகர். இசையமைப்பு படத்தின் கதையமைப்புடன் சேர்ந்து அமைந்து இருக்கிறது. படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள்.

இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது..,
“அருண் விஜய் வெற்றியை சந்திக்க பல காலம் ஆகியது, அவர் தனது தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர். இசையமைப்பாளர் சபீர் உடைய பாடல் மயக்கும் அளவில் இருக்கிறது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் எனது வாழ்த்துகள்.”
ஒளிப்பதிவாளர் கோபிநாத் கூறியதாவது..,
“இது ஒரு குடும்ப படம், அருண் விஜய் சிறப்பான பங்களிப்பை கொடுத்துள்ளார். படம் சிறப்பாக வந்துள்ளது, படத்தை பார்த்து உங்களுடைய வாழ்த்துக்களை கூறுங்கள். “

இசையமைப்பாளர் சபீர் கூறியதாவது..,
“மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் தான் பணியாற்றியுள்ளோம். அருண் விஜய் சார் ஒரு பாடல் பாடியுள்ளார், அந்த பாடல் சுலபமானது அல்ல, அது தொழில்முறை ஆட்களால் மட்டுமே உணர்வுடன் வெளிகாட்ட முடியும், அதை அவர் கொடுத்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களும் கதையோடு சேர்ந்து பயணிக்கும் படி இருக்கும். இயக்குனர் குமரவேலன், ஆக்‌ஷன், எமோஷன், அதே நேரத்தில் சமூகத்துடன் சார்ந்து நிற்கும் திரைப்படத்தை உருவாக்க கூடியவர், அவர் உடன் பணிபுரிந்தது மிகச்சிறந்த அனுபவம். இந்த படம் நிச்சயமாக சிறந்த அனுபவமாக இருக்கும்.”

இயக்குனர் GNR குமரவேலன் கூறியதாவது..,
“என்னுடைய படத்திற்கு பாராட்டுகளையும், நான் செய்த தவறுகளுக்கு விமர்சனங்களும் தொடர்ந்து கொடுத்து வரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படத்தின் கதையாசிரியர் உண்மையாகவே காவல் துறையில் பணிபுரிகிறார். இந்த படத்தின் கதையை கேட்டு, என்னுடைய முந்தைய படங்கள் பற்றி யோசிக்காமல் அருண் விஜய் ஓகே செய்தார். விஜய்குமார் சார் உடன் பணிபுரிவது எனக்கு முதலில் பயத்தை கொடுத்தது. அதன்பிறகு மகிழ்ச்சியாக இருந்தது. நடிகரே இந்த படத்தின் தயாரிப்பாளராக அமைந்தது பெரிய பலமாக அமைந்தது. கோவிட் காலத்தில் நம்பிக்கை இழக்க கூடிய தருணத்தில், எங்களுக்கு நம்பிக்கை அளித்தவர் விஜயகுமார் சார். இந்த படத்தை ஒடிடியில் வெளியிடாமல், தியேட்டரில் வெளியிட வேண்டும் என்று அருண் விஜய் உறுதியாக இருந்தார். இந்த படம் கண்டிப்பாக பேசப்பட கூடிய படமாக இருக்கும்.”

நடிகை பாலக் லால்வாணி கூறியதாவது…
இது என்னுடைய தமிழ் பேச்சு. மொழி தெரியாமல் எப்படி தமிழ் படத்தில் நடிக்கிறனு எல்லோரும் கேட்பார்கள். உணர்வுக்கு மொழி கிடையாது. இந்தப்படத்தில் நல்ல மெசேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த வாய்ப்பு வந்த போது உடனடியாக ஒப்புக்கொண்டேன். என் மேல நம்பிக்கை வைத்த இயக்குநர், அருண் விஜய் மற்றும் விஜயகுமார் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்தப்படம் மிக நல்ல படம் தியேட்டரில் பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

நடிகர் அருண் விஜய் கூறியதாவது..,
“இந்த படம் தியேட்டரில் வர வேண்டும் என்று நான் உறுதியாக இருந்தேன். இது பார்வையாளர்களுக்கான படமாக இருக்கும். சமூகத்தில் நடக்கும் சம்பவங்களை தொடர்புபடுத்த கூடிய ஒரு கதாபாத்திரமாக இந்த படத்தின் பாரிவெங்கட் கதாபாத்திரம் இருக்கும். எனது முந்தயை படத்திற்கும் இந்த படத்திற்கும் பெரிய வித்தியாசம் இருக்கும். இந்த படத்தில் உணர்வுபூர்வமான பல அம்சங்கள் இருக்கிறது. அதை உருவாக்கிய இயக்குனர் குமரவேலனுக்கு அவர்களுக்கு நன்றி. இந்த படத்தை தயாரித்த என் தந்தைக்கு நன்றி. என்னை நம்பி அவர் ஓகே சொன்னார். படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இசையமைப்பாளருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள். இந்த படம் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் பிடிக்க கூடிய ஒன்றாக இருக்கும். “
தயாரிப்பாளர் விஜயகுமார் கூறியதாவது..,
“ படத்தின் இயக்குனர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களது சொந்த படமாக நினைத்து பணியாற்றியுள்ளனர். இந்த படத்தை மக்கள் அனைவரும் பார்க்க கூடிய படமாக உருவாக்கியுள்ளோம். இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. “

சினம் படத்தினை Movie Slides Pvt. Ltd  சார்பில் R. விஜயகுமார் தயாரித்துள்ளார்.  இயக்குநர் GNR குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், RNR மனோகர், KSG வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தொழில்நுட்பக் குழுவில் ஷபீர் (இசை), கோபிநாத் (ஒளிப்பதிவு), மைக்கேல் BFA (கலை), A ராஜாமுகமது (எடிட்டர்), R சரவணன் (கதை-உரையாடல்கள்), ஆரத்தி அருண் (காஸ்ட்யூம் டிசைனர்), மதன் கார்க்கி-ஏக்நாத்-பிரியன்-தமிழனங்கு ( பாடல் வரிகள்)

Previous Post

நடிகர் ராஜ்கிரனின் ஆசிரியர் தின நினைவுகள்..!

Next Post

உச்ச நட்சத்திரம் பாராட்டிய நட்சத்திரம் நகர்கிறது ..!

Next Post

உச்ச நட்சத்திரம் பாராட்டிய நட்சத்திரம் நகர்கிறது ..!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • எருமை சாணி ஹரிஜாவை ஞாயபகம் இருக்கா? தொடையழகி ரம்பா ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படங்கள்.

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

    0 shares
    Share 0 Tweet 0
  • Actress Preethi Sharma Photoshoot Stills

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 announces first ever virtual reality based thriller series “PUBGOA”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாவீரன் பிள்ளை படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி மற்றும் ராதா ரவி முக்கிய கதா படத்தில் நடித்துள்ளார்கள்..

March 23, 2023

பரபரப்பான பான் – இந்தியப் படைப்பான ‘கேடி-தி டெவில்’ திரைப்படத்தில், சத்யவதியாக பாலிவுட் பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி இணைந்துள்ளார் !

March 23, 2023

39 ஆண்டுகளுக்கு பிறகு வைரமுத்து – சித்ரா !

March 23, 2023

தமிழக அரசு செயலால் கார்த்தி மகிழ்ச்சி.

March 23, 2023

‘காசேதான் கடவுளடா’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு

March 23, 2023

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் வழங்கும், கௌதம் கார்த்திக் & சரத்குமார் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

March 21, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!