ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

தீராக்காதல் – விமர்சனம்

by Tamil2daynews
May 27, 2023
in விமர்சனம்
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தீராக்காதல் – விமர்சனம்

 

கண்களில் ஒரு காதலுக்கு மரியாதையையும்
மனதில் ஒரு மௌனராகத்தையும் கொடுத்த இயக்குனருக்கு முதலில் ஒரு பாராட்டுக்கள்
ராஜா ராணிக்கு பிறகு ரசிக்க வைக்கும் நடிகர் ஜெய் க்கும் வாழ்த்துக்கள்
சொப்பனசுந்தரி,
ஃபர்ஹானா
தீராக்காதல்
மூன்றிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் கொண்டு நடித்திருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 2023 ஆம் ஆண்டில் சிறந்த நடிகை விருது பெறுவது நிச்சயம்

நெடுஞ்சாலை ஷிவதாவா இவர், நடிப்பில் என்ன ஒரு முன்னேற்றம்

 

காதலிக்கும் அனைவருக்குமே அந்தக் காதல் திருமணத்தில் போய் முடிவதில்லை. அப்படி சேராத காதல்கள் இருவேறு திசைகளில் சென்று, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்க நேர்ந்தால் அதுவே ‘தீராக் காதல்’.

சென்னையில் உள்ள ஓர் உயர் நடுத்தர வர்க்க குடியிருப்பில் மனைவி, குழந்தை என அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கௌதம் (ஜெய்). அலுவலக நிமித்தமாக மங்களூருக்கு ரயிலில் செல்ல வேண்டிய சூழல் வருகிறது. நள்ளிரவில் டீ குடிக்க ஒரு ஸ்டேஷனில் இறங்கும்போது அங்கு தனது முன்னாள் காதலியான ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) யதேச்சையாக சந்திக்கிறார். ஆரண்யாவும் மங்களூருக்கு செல்வதாக கூறுகிறார். பல வருடங்களுக்குப் பிறகான அந்தச் சந்திப்பில் இருவரும் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களது சந்திப்பு மங்களூருவிலும் தொடர்கிறது. தனது கணவன் தன்னை தினமும் அடித்து கொடுமைப்படுத்துவதை தனது முன்னாள் காதலன் கௌதமிடம் சொல்கிறார் ஆரண்யா. அந்த ஒருவார காலமும் இருவரும் தங்கள் சொந்தப் பிரச்சினைகளை மறந்து காதல் வானில் சிறகடிக்கின்றனர். தன்னுடைய மனைவி வந்தனா (ஷிவதா) எந்நேரமும் அலுவலக பணியிலேயே மூழ்கியிருப்பதால் ஆரண்யாவின் வருகையில் கௌதமும் ஆறுதலை உணர்கிறார்.
கவனம் ஈர்க்கும் 'தீராக்காதல்' டிரைலர் | Tamil cinema theera kadhal trailer released

பின்னர் இருவரும் சென்னை திரும்பும் நேரத்தில், இனி சந்தித்துக்கொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கின்றனர். ஆனால், ஒரு சண்டையில் கணவர் கொடூரமாக தாக்கியதால் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார் ஆரண்யா. அதன் பிறகு அடிக்கடி கௌதமை சந்திக்கும் அவர், தன்னால் பழைய நினைவுகளை மறக்க முடியவில்லை என்றும், குடும்பத்தை விட்டுவிட்டு தன்னோடு வந்துவிடுமாறும் கௌதமை நச்சரிக்கிறார். கௌதமால் கொஞ்சம் கொஞ்சமாக நிராகரிக்கப்படும் ஆரண்யா, ஒருகட்டத்தில் கவுதமின் வீடு இருக்கும் அபார்ட்மென்ட்டுக்கே குடிவந்து விடுகிறார். இதனால் இருவரது கௌதமுக்கு பல சிக்கல்கள் எழுகின்றன. அதிலிருந்து அவர் மீண்டாரா? ஆரண்யாவின் காதல் என்னவானது? அது கௌதமின் குடும்பத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது? – இப்படி பல கேள்விகளுக்கு பட்டும் படாமலும் பதில் சொல்லியிருக்கிறது ‘தீராக் காதல்’.

“அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய ரோஹின் வெங்கடேசனின் அடுத்த படைப்பு இது. மனைவிக்கும் காதலிக்கும் இடையே அல்லாடும் கணவன் என்ற கதைக்களம் தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. எனினும், அது பார்வையாளர்களை ஈர்க்கும்படி புதிதாக வடிக்கப்பட்டுள்ளதா என்று பார்க்கலாம்.

படம் தொடங்கியதுமே கதைக்குள் நேரடியாக நுழைந்து விடுகிறது. ஒரு பக்கம் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது கணவனிடம் அனுபவிக்கும் கொடுமைகள், இன்னொரு பக்கம் ஜெய்க்கும் அவரது மனைவி ஷிவதாவுக்கும் ஓர் ஒட்டுதல் இல்லாமல் இருப்பது உள்ளிட்டவற்றை தனியாக காட்டி நேரத்தை வீணடிக்காமல் படம் தொடங்கிய ஓரிரு நிமிடங்களுக்காகவே பார்வையாளர்களுக்கு புரிய வைத்துவிடுகிறார் இயக்குநர். அதேபோல ஐஸ்வர்யா ராஜேஷ் – ஜெய் இருவருக்குமான பழைய காதல் குறித்தும், அது முறிந்த கதையையும் ஃப்ளாஷ்பேக் என்ற பெயரில் காட்டி சோதிக்காமல் வசனங்கள் வழியாகவே வைத்திருப்பது ஆறுதல்.
Theera kadhal movie download -Movie Download 480p 720p 1080p

முதல் பாதி முழுவதும் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் – ஜெய் காதல் காட்சிகள் பார்க்கும் நமக்கு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. பலவீனமான காட்சியமைப்புகளால் ஒரு கட்டத்தில் இருவரும் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தையே பேசிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அவற்றில் எந்தவொரு அழுத்தமும் இல்லாததால், ஐஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் மீண்டும் ஜெய்யை தேடி ஓடும் காட்சிகள் உணர்வுரீதியாக எந்தவொரு பாதிப்பையும் தரவில்லை.

அமைதியான நடுத்தர வயது குடும்பத் தலைவனாக ஜெய் ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார். பழைய காதலியா, கட்டிய மனைவியா என்று ஒருவித குழப்ப மனநிலையை படம் முழுவதும் சிறப்பாக பிரதிபலிக்கிறார். படத்தில் மற்றொரு கனமான கதாபாத்திரம் ஐஸ்வர்யா ராஜேஷுடயது. தன்னுடைய பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார். எனினும் எமோஷனல் காட்சிகளில் தடுமாற்றம் தெரிகிறது. ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவதாவுக்கு பெரிதாக வேலை இல்லை என்றாலும் அதனை நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஜெய்யின் நண்பனாக வரும் அப்துல், ஐஸ்வர்யா ராஜேஷின் கணவராக வரும் அம்ஜத் கான், ஜெய் – ஷிவதா தம்பதியில் குழந்தையாக நடித்திருக்கும் வ்ரித்தி விஷால் என அனைவரும் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியுள்ளனர்.

ஜெய்யின் அபார்ட்மெண்ட்டுக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் குடிவரும்போது திரைக்கதை சூடு பிடிக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷை தன் மனைவியின் பார்வையில் படாமல் ஜெய் சமாளிப்பது, ஒரு கட்டத்தில் எல்லா விஷயமும் மனைவிக்கு தெரிவது என அடுத்தடுத்த காட்சிகள் விறுவிறுப்பாகவே நகர்கின்றன. எனினும், முதலில் ஜெய் ஆறுதல் சொல்வதும், பின்னர் மீண்டும் ஐஸ்வர்யாவை நிராகரிப்பதும் என காட்சிகள் ஒரே போன்று ரிபீட் ஆவது சலிப்பை ஏற்படுத்துகிறது.
Theera Kaadhal' movie review: Fine performances a consolation in this dull romantic thriller - The Hindu

அதேபோல திரும்ப திரும்ப ஜெய்யை, ஐஸ்வர்யா ராஜேஷ் லவ் டார்ச்சர் செய்யும் அளவுக்கான காரணம் அழுத்தமாக பதிய வைக்கப்படாதது பெரிய குறை. ஜெய் வீட்டுக்கு எதிரிலேயே ஐஸ்வர்யா ராஜேஷ் குடிவருவது, தன் சைக்கோ கணவனை ஓங்கி அறையும் காட்சி, ஷிவதாவிடம் ஜெய் மாட்டிக் கொள்வது ஆகிய காட்சிகளில் அரங்கம் அதிர்கிறது. ஜி.ஆர்.சுரேந்தர்நாத்தின் கூர்மையான வசனங்கள் பல இடங்களில் அப்ளாஸ் பெறுகின்றன.

சித்து குமாரின் பின்னணி இசை, ரவிவர்மன் நீலமேகத்தின் ஒளிப்பதிவு, பிரசன்னா ஜிகேவின் எடிட்டிங் உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்கள் படத்தின் குறைகளை நிவர்த்தி செய்துவிடுகின்றன. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

மொத்தத்தில் இந்த ‘தீராக் காதல்’. இயக்குனரின் திறமையான திரைக்கதையால் வலிமையான வசனத்தால் ஐஸ்வர்யா ராஜேஷ்,ஜெய், ஷிவதா இவர்களின் போட்டி நடிப்பாள் படம் நிமிர்ந்து நிற்கின்றது

இந்த தீராக்காதல் என்றைக்குமே தீராத காதல்
Previous Post

நடிகை ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கிறார்!

Next Post

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

Next Post

மே-30ஆம் தேதி கோவையில் பிரமாண்டமாக நடைபெறும் ‘ரெஜினா’ டீசர் வெளியீட்டு விழா

Popular News

  • ‘போர் தொழில்’ விமர்சனம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • நினைவுப்பாதையில் ஒரு பயணம் ; ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • விமானம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டக்கர்’ விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சித்தார்த்தின் புதிய அவதாரம், திவ்யன்ஷாவின் தைரியமான கதாபாத்திரம் மற்றும் ஹிட் பாடல்களின் தொகுப்பு என இன்று திரையரங்குகளில் ‘டக்கர்’ திரைப்படம் வெளியாகி உள்ளது!

June 10, 2023

விமானம் – விமர்சனம்

June 10, 2023

‘டக்கர்’ விமர்சனம்

June 10, 2023

எம் சினிமா பத்ரி தயாரிப்பில் சாஜிசலீம் இயக்கத்தில் விதார்த் -சுவேதா டோரத்தி நடிக்கும் புதுமையான சஸ்பென்ஸ் திரில்லர் ‘லாந்தர்’

June 10, 2023
பெல்-விமர்சனம்

பெல்-விமர்சனம்

June 9, 2023

நினைவுப்பாதையில் ஒரு பயணம் ; ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தை பார்வையிட்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

June 9, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!